தொழுகைக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் – மும்பையில் நெகிழ்ச்சியான சம்பவம்…..!!

ஜும்ஆ தொழுகைக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் – மும்பையில் நெகிழ்ச்சியான சம்பவம்…..!!

மும்பையை சேர்ந்த ஷேக் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து ஆட்டோவை எதிர்பார்த்து இருந்தார்.

நாமம் போட்ட ஒரு இந்து ஆட்டோ ஓட்டுநர் வந்துள்ளார், அருகில் உள்ள மசூதிக்கு செல்ல வேண்டும் என கூறி அமர்ந்துள்ளார் ஷேக்.

சிறிது தூரம் சென்ற பின் பர்ஸை செக் பண்ணியபோது பர்ஸ் இல்லை, பர்ஸை எடுத்து வர மறந்துவிட்டதாக ஆட்டோ ஓட்டுநரிடம் கூறியுள்ளார் ஷேக்.

கவலை வேண்டாம் தம்பி பகவானை வணங்க செல்கிறாய் உன்னை நான் மசூதியில் விடுகிறேன் என கூறியுள்ளார்.

உங்கள் உதவிக்கு நன்றி என்னை மசூதியில் விட்டு நீங்கள் 15 நிமிடங்கள் காத்து இருந்து மீண்டும் என்னை அலுவலகத்தில் விட்டு விடுங்கள் கூடுதல் பணமும் தர தயாராக உள்ளேன் என ஷேக் கூறியுள்ளார்.

அது முடியாது தம்பி நான் உன்னை மசூதியில் இறக்கிவிட்டு உடனே சென்றுவிடுவேன் என கூறியுள்ளார்,

மசூதி வந்தவுடன் ஆட்டோ ஓட்டுநர் ஷேக்கிடம் பணம் கொடுத்துள்ளார்,

தம்பி தொழுகை முடித்து நீ உனது அலுவலகம் செல்ல இந்த பணத்தை பயன்படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

தொழுகை முடித்து வந்து பார்த்த பொழுது அந்த அட்டோ ஓட்டுனர் அங்கு இல்லை.

15 நிமிடங்கள் தாமதித்து இருந்தால் அன்றைய தொழுகையை இழக்க நேரிட்டு இருக்கும்.

இந்த சம்பவத்தை தனது மூகநூளில் பதிவிட்டுள்ள ஷேக், மதத்தின் பெயரால் வெறுப்பு பேச்சுக்கள் அதிகமாகி வரும் இந்த சூழ்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அமைதியை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

https://www.facebook.com/shaikhrameez/posts/10154454377019561

பதிவு : முஹம்மது இப்ராஹீம்

 

Add Comment