கடையநல்லூரில் மீண்டும் “டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவுகிறது.

WhatsApp Image 2016-08-30 at 7.12.03 PMகடையநல்லூர் நகராட்சியின் அலட்சியப் போக்கால் கடையநல்லூரில் மீண்டும் “டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவுகிறது.

கடையநல்லூர் நகராட்சியின் திட்டமிட்ட அலட்சியப்போக்கினால் தற்பொழுது கடையநல்லூர் நகராட்சிப் பகுதிகளில் செயற்கையான தண்ணீர் பஞ்சம் ஏற்படுத்தப்பட்டதுடன். கடந்த வருடத்தில் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பலரை பலி வாங்கிய “டெங்கு காய்ச்சல்” மீண்டும் வந்து பலரை பலி வாங்க காத்திருக்கிறது.
அதற்கான அறிகுறிகள் கடையநல்லூரில் அங்கொன்று இங்கொன்றுமாக தலைகாட்டத் தொடங்கியுள்ளது.

கடையநல்லூர் நகராட்சிப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் 25 நாட்களுக்கு ஒருமுறை நகராட்சி விடும் குடிதண்ணீரை பொதுமக்கள் தொட்டிகளில் சேமித்து வைத்து பயன்படுத்தும் வழக்கம் எல்லா வீடுகளிலும் உள்ளது.

இப்படி அந்தத் தொட்டிகளில் சேமித்து வைக்கும் தண்ணீர் டெங்கு கொசுக்கள் உற்பத்தி யாகும் வாழ்விடமாக மாறிவிட்டது டெங்கு கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பகலிலே கொசுக்கள் கடிக்க ஆரம்பித்து விட்டது இதனால் மக்களுக்கு டெங்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி குறிச்சி சுலைமான் கூறும்போது

முன்பெல்லாம் கடையநல்லூர் பகுதிகளில் அக்டோபர், நவம்பர் மாதங்களைப் ‘பருவமழைக் காலம்’ என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றோம். இப்போது சில ஆண்டுகளாக இது ‘டெங்கு காய்ச்சல் காலம்’ என்று பயந்து அலறும்படியாக நிலைமை மாறியிருக்கிறது இப்போதே இரத்தம் கேட்டு மக்கள் எங்கள் அமைப்பை தொடர்பு கொள்ள ஆரம்பித்துவிட்டடனர் நகராட்சி நிர்வாகம் டெங்கு வரும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து நகராட்சி சுகாதாரதுறை டெங்கை விரட்ட தீவிரம் காட்டி உள்ளது.

செய்தி படம் குறிச்சிசுலைமான்.

Add Comment