கடையநல்லூர் எல்லையிலேயே வட்டாட்சியர் அலுவலகம் அமையும் – அமைச்சர் உதயகுமார் உறுதி

14238078_1136310996461558_1325020350506967133_n

கடையநல்லூர் எல்லையிலேயே வட்டாட்சியர் அலுவலகம் அமையும்
சட்டமன்றத்தில் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் உறுதி

தமிழக சட்டப்ரேவையில் 01.09.2016 அன்று நடைபெற்ற வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசியதாவது:-

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, வருவாய்துறையினுடைய மானியக்கோரிக்கை சம்மந்தமான புதிய அறிவிப்புகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள். எனது தொகுதியான கடையநல்லூரிலே வட்டாட்சியர் அலுவலகம் நகர எல்லையிலே உருவாக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று ஏற்கனவே நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கடையநல்லூரின் எல்லையிலேயே வட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்தி தரப்படும் என்று உறுதியளித்தமைக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதற்காக கடையநல்லூர் எல்லையிலே வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு இரண்டு இடங்களை பரிந்துரை செய்திருக்கின்றோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் அந்த இரண்டு இடங்களில் ஒரு இடத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தை விரைவாக உருவாக்கித்தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கு பதிலளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்கள் பேசியதாவது:-
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு நான் ஏற்கனவே இந்த அவையிலே பதில் சொல்லிவிட்டேன். கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் அவர்கள் கூறியுள்ளபடி குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு இடங்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடைய ஆய்வில் தற்போது உள்ளது. விரைவாக அந்த பணிகள் முடியும் என்பதே தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் உதயக்குமார் உறுதி அளித்தார்.

Comments

comments

Add Comment