கடையநல்லூர் இக்பால் நகர் கிழக்குப் பகுதி…என்ன கேடு இவர்களுக்கு….

என்ன கேடு இவர்களுக்கு….

இக்பால் நகர் கிழக்குப் பகுதி , ஆமீனாமாள் தெரு , அழகாக செங்கல் கொண்டு தெருவை அலங்கரித்து, கலர்கலராய் வீடுகளும் காண்பதற்கு அழகு சேர்ப்பதோடு , அங்கு வசிப்பவர்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளத்தான் தோணும், .. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதேதெருவில் கிழக்கே வசித்துவரும் ஒருசிலர் அந்தத்தெருவில் வசிக்க தகுதியற்றவர்களாவே கருதவேண்டியுள்ளது ,…

காரணம் இன்னமும் குப்பையை வீசிஎறியும் பழக்கம் விட்டொழியவில்லை வீணாபோன எம்மின பெண்களுக்கு ,.. தினந்தோறும் வாசல்தூரம் வந்து குரல்கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பற்றாக்குறைக்கு விசில் அடித்து குப்பைகூளங்களை கேட்டு வாங்கும் எமதூதர் துப்புரவு தொழிலாளிகளிடம் கொடுப்பதற்கு என்ன கேடு இவர்களுக்கு …

கனவுகூட கண்டிருக்கமாட்டோம் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு…… அவ்வளவு, சௌகர்யம் பண்ணிக்கொடுத்தும் … குறத்தியை தூக்கி சிம்மாசனத்தில் வைத்த கதைபோல் ,…, வீட்டில் சேரும் குப்பைகள் முதற்கொண்டு அசிங்கங்கள் வரை கீஸ் பையில் சேகரித்து விடியும் முன்பு இரயில்வே தண்டவாளத்தை நோக்கி வீசிஎறிவது,, கேவலமாக தெரியவில்லையோ என்னவோ , சூடு சுரணையற்ற ஜென்மங்களுக்கு , அறிவுரையும் கூறியாச்சு, அதட்டியும் சொல்லியாச்சு, என்ன பிறவிகளோ …

14231328_1323744647660282_7465370184688022621_o

இதை பலமுறை பக்குவமாக எடுத்துக்கூறியும் ஏறவில்லை புத்திக்கு பண்பாடற்ற ஜனங்களுக்கு…., அதுபோல் தினந்தோறும் தண்டவாளம் பழுதுநீக்கும் தொழிலாளி வசைபாடலை கேட்டால் மானமுள்ளவர்கள் மறுகனமே மரணமே பெரியது என்பார்கள் அந்தளவுக்கு காலையில் காதுகூசும்படி கர்ஜனை செய்கின்றான் செய்துகொண்டும் இருக்கிறான், ரயில்வே ஊழியர் . பற்றாகுறைக்கு சமுதாயத்தையும் சேர்த்தே கேவலமாக சாடுகிறான் , தினமும் தண்டவாளத்தில் கிடக்கும் குப்பைகளை நீக்கும்போது அதில் காணப்படும் மனித கழிவுகள், மாசக்கழிவுகள் வரை ஒப்புவித்து வசைபாடுவதை எழுதமுடியாத கூடாத வார்த்தைகள் . ஒருசிலர் இதை கண்டும் காணாதது போல் இருப்பதைக் காணும்போது சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கரையின்மையை காட்டுகிறது.. அதேநேரம் குப்பையை தண்டவாளத்தில் விசி எறியும் இவர்களுக்கும் எங்களுக்கென்ன என்று ஒதுங்கி இருப்பவர்களுக்கும் ஒருவித்தியாசமும் இல்லை என நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கும் தோணுகிறது ..

கடைசியாக ரயில்வே ஊழியர்கள் மிகக்கடுமையான எச்சரிக்கை செய்துள்ளதாகவும் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் அங்கு சுற்றி இருக்கும் அனைவரையும் பாதிக்கும் படியாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியர் சொன்னார், ஆகவே அங்கு உள்ளவர்கள் ஒன்றுசேர்ந்து தவரு செய்பவர்களை எச்சரித்து மேலும் நடக்காமல் பார்த்துக் கொள்வது அனைவருக்கும் நல்லது .. .. ..

Haider Ali

Add Comment