விவசாயிகள் கோடிஸ்வரர்களாக இருக்கிறார்கள் அமைச்சர் கருப்பண்ணன்..

விவசாயிகள் கோடிஸ்வரர்களாக இருக்கிறார்கள் அமைச்சர் கருப்பண்ணன்..
நான் இதுவரை ஒருசிலராவது அறிவு,ஆற்றல் உடையோராய் திறமையாக செயல்படுவோராய் இருப்பார்கள் என நினைத்தேன் ஒட்டுமொத்த அறிவிலிகளும் அடிமை என்ற வரம்புக்குள்தான் வருகிறார்கள்.. இவர்கள் கையிருப்பு இவ்வளவுதான்.. இவர்கள் மீது கோவமெல்லாம் இல்லை முட்டாள்கள் என தெரிந்தும் மக்கள் தேர்தெடுத்திருக்கிறார்களே என்ற ஆதங்கம் மட்டுமே மிஞ்சுகிறது.
..
இவர் யாரையெல்லாம் விவசாயி என்கிறார் விளைநிலங்களை விலை நிலங்களாக மாற்றியவர்களையா இன்னும் மிச்சமிருக்கும் விளைநிலங்களையெல்லாம் ப்ளாட் போடமுடியுமா என்று நினைக்கிறவர்களை கோடிஸ்வரர் எனச் சொல்கிறார் போலும்..
..
இப்படி அமைச்சர்கள் பேசுவது இதுமுதல்முறையல்ல.. வாக்களித்த மக்களை கீழ்தரமாக பேசுவது அதிமுகவினருக்கு சர்வசாதாரணமான விடயம்.. எனக்கென்னவோ இதுபோன்ற உளறல்கள் ஜெயலலிதா அனுமதியோடுதான் பேசுகிறார்களோ என தோன்றுகிறது.. காரணம் இப்படி பேசினால் பிரச்சனையை திசைத்திருப்ப முடியும் .. அதேவேளை மக்களின் கோவம் அதிகமானால் சம்பந்தப்பட்ட அமைச்சரை நீக்கிவிடலாம்.. பெரிய அளவில் எதிர்ப்பில்லையென்றால் தண்ணீர் பிரச்சனையை வேறுபக்கம் மடைமாற்றிவிடலாம் இதைதான் எண்ணுகிறார் ஜெயலலிதா என நினைக்கிறேன் .. ஊடகங்கள் விவசாயிகள் மாடமாளிகையில் வாழ்வதைப்போல கதையடிக்கும்..
..
சிறு குறு விவசாயிகள் என ஏறக்குறைய எழுபது லட்சம் குடும்பங்கள். காவிரி, முல்லை ,பாலாற்றை நம்பி இருக்கின்றன.. சில நிலகிழார்கள் உண்டு மறுப்பதற்கில்லை.. ஆனால் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் என நிலங்களை வைத்திருப்பவரும் குத்திகைக்கு எடுத்து நடுகிறவர்களுமே அதிகம்..
தண்ணீர் தர மறுக்கிறார்கள் அண்டை மாநிலத்தவர்கள் என்ன செய்வது என பேசியிருந்தால் அதில் நியாயமிருக்கிறது. தண்ணீரை பெற்று தர வக்கில்லை சதா உறக்கத்திலும் தன் மீதான ஊழல்வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதில் என்னாகுமோ என்ற சிந்தனையோடு ஆட்சி செய்கிறவர்.. இட்லிகடையில் கூட ஊழல் செய்ய கற்றுக்கொடுத்தவரிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும்..
..
நல்ல வேளை தமிழ்நாடு கோடிஸ்வரர்களின் நாடு எல்லோருமே கோடிகளில் புழங்குகிறார்கள் என சொல்லாமல் விட்டதுவரை சந்தோசம்..
கொங்கு அறிவின் பட்டறை என்பார்கள்..,இப்போதெல்லாம்.. அறிவிலிகளின் கூடாரமாகிறது.. என்னசெய்ய..
..
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்..
..
ஆலஞ்சி மன்சூர்

Add Comment