மனிதர்கள் அனைவரும் சமமே

சவூதி அரேபியாவில் உலகம் முழுவதிலும் இருந்து முஸ்லீம்கள் தங்கள் மார்க்க கடமையான புனித ஹஜ்ஜை நிறைவேற்ற லட்சகணக்கில் மக்கா நகரில் குவிந்துள்ளனர்

பல இன மக்கள்,பல மொழி பேசுபவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் அங்கு தொழுகைக்கு ஒன்றாக செல்வதுண்டு அதில் ஆப்ரிக்க நாட்டு கருப்பின முதியவர் ஒருவர் நடப்பதற்கு சிரமப்பட்டுகொண்டு இருப்பதை பார்த்த எங்கிருந்தோ வந்த மொழி தெரியாத வெள்ளைநிறத்தவர் அந்த முதியவருக்கு உதவும் வகையில் முதுகில் சுமந்து சென்றது மனிதர்களுக்கு இடையே நிறம் வேற்றுமை என்றாலும் மனிதர்கள் அனைவரும் சமமே என்று உணரமுடிகிறது.!!

Add Comment