கடையநல்லூர் சுகாதாரமான முறையில் பெருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுகாதார பெருநாள்

கடையநல்லூர் சுகாதாரமான முறையில் பெருநாளை கொண்டும் விதத்தில் விழிப்புணர்வு மற்றும் இலவச பாலிதீன் பை வழங்கும் நிகழ்ச்சிவிழிப்புணர்வு நடைபெற்றது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பஜார் கிளை சார்பாக இன்று மதியம் 1:00 மணியளவில் நடு அய்யாபுரம் தெருவில் பஜார் கிளை மர்கஸ் வளாகத்தில் வைத்து பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் அறுக்கப்படும் பிராணிகளின் இரத்ததம் சானம் இறைச்சி கழிவுகளை நகராட்சி கழிவு நீர் ஒடையில் போடுவதை தடுக்கும் விதத்தில் அவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு மற்றும் இலவச பாலிதீன் பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந் நிகழ்ச்சிக்கு குறிச்சி சுலைமான் தலைமை வகித்தார்
மாவட்ட பேச்சாளர் சதாம் ஹுசைன் இஸ்லாம் கூறும் சுகாதாரம் என்ற தலைப்பில் பேசினார் அதனை தொடர்ந்து வீடுகள் தோறும் பாலிதீன் பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கடையநல்லூர் நகராட்சி
சுகாதார அதிகாரி ஜெயபால் மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாலிதீன் பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பாதுஷா,செய்யது சுலைமான் ,உஸ்மான் மற்றும் வெளிநாடு மண்டல நிர்வாகிகள், நல்லூர் சுலைமான்,அப்துன் நாசர்,ரமீஸ் சாதிக்அலி உட்பட பலர் கலந்துகொண்டனர் தொண்டர் அனியினர் அனைத்து வீடுகளுக்கும் சென்று குப்பை பைகளை வழங்கினர்.

Add Comment