கடையநல்லூரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

கடையநல்லூரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆறு இடங்களில் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடையநல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி அதிகாலை 6 மணிமுதலே காயிதேமில்லத்  திடலே நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 06.30 மணியளவில் பெருநாள் தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துன் நாசர் அவர்கள் நடத்தினார்கள். அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு ஆற்றிய உரையில் இறை நம்பிக்கை மனிதனை நல்லவனாக ஆக்குவதற்கு உதவியாக இருக்கின்றது. இறை தூதர்கள் உலகில் இறைவனுடைய இறை பணிகளை நடைமுறை படுத்துவதற்காகவே இறைவன் அனுப்பினான் இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்களில் இப்றாகீம் நபி அவர்கள் அவர் தன் மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்து பலியிட முயன்ற போது இறைவனுக்கு மனிதர்களை நரபலி கொடுப்பது கூடாது என்பதற்காக. அதற்க்கு பகரமாக  இஸ்லாமியர்கள்   ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற பலி  பிராணிகளை அறுத்து இறைவனுக்காக பலியிடுகின்றார்கள். இதனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் ஊயிரை எக் காரணம் கொண்டும் கடவுளின் பெயராலும் மனிதனின் பெயராலும் எடுப்பதற்க்கு இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. தனி மனித உரிமையில் தலையிட இஸ்லாம்  எல்லா வகையிலும் தடுக்கின்றது என கூறினார்.     இதில் ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண், பஜார் .மற்றும் மதினா நகர் கிளை நிர்வாகிகள் ஜப்பார், ,துராப்ஷா, அய்யூப்கான் குறிச்சி சுலைமான், செய்யதுசுலைமான், பாதுஷா, அபுபக்கர் மற்றும் தொண்டரணியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.கடையநல்லூர் வட்டாட்சியர் நாகராஜ் மேர்பார்வையில் கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்பநாதபிள்ளை தலைமையில் காவல்துறையினர் பெருநாள் தொழுகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.
இது போன்று இக்பால் நகர் கிளை சார்பாக பாத்திமா நகரில் தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் மாவட்ட பேச்சாளர் அப்துல் குத்தூஸ் அவர்களும், பேட்டை பகுதியில் மர்கஸ்ஸுன் நூர் திடலில் அமீரக வடக்கு மண்டல செயலாளர் முஹம்மது நாசர் அவர்களும் ரஹ்மானியாபுரம்  மர்யம் பள்ளி திடலில் மாவட்ட செயலாளர் தாஹா அவர்களும், மக்கா நகர் தவ்ஹீத் திடலில் மாவட்ட பேச்சாளர் சதாம்ஹீசைன் அவர்களும் மக்காநகர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி அவர்களும் பெருநாள் தொழுகையும் அதை தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள்.தொழுகைக்கு பிறகு கடையநல்லூர் பகுதியில் ஆயிரக்கானக்கான ஆடுகளும், மாடுகளும் அறுத்து பலியிட்டு ஏழைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

 

img-20160913-wa0018 img-20160913-wa0017 img-20160913-wa0015 img-20160913-wa0010

Add Comment