மஸ்ஜித் முபாரக் சார்பில் பெருநாள் தொழுகை

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பில் நபி வழியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 13.09.2016 செவ்வாய்கிழமை அன்று மஸ்ஜித் முபாரக் முன்புள்ள மெயின் பஜார் திடலில் காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. அதனடிப்படடையில் அன்று காலை 6.00 மணியிலிருந்து சாரை சாரையாக ஆண்களும், பெண்களும் பெருநாள் தொழுகைக்காக வரத்துவங்கினர்.

கடையநல்லூர் தலைமை இமாம் மவ்லவி.எஸ்.எஸ்.யூ. சைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் மக்களுக்கு பெருநாள் பேருரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஹஜ்ஜுப் பெருநாள் என்பது நபி இப்ராஹீம் (அலை) அவர்களை நினைவு கூர்ந்து நடத்தப்படுகிற ஒருஇறை வணக்க வழிபாடாகும். மேலும் இப்ராஹீம் நபி அவர்கள் தனி மனிதனாக நின்று ஏகத்துவ பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்.மேலும் இப்ராஹீம் நபி நினைவாகத்தான் இறைவனுக்காக ஆடு,மாடுகளை பலியிடுகிறோம் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

இது போல் பாத்திமா நகர் தக்வா திடலில் வி. அப்துல் காதர் அவர்களும், பேட்டை அக்ஸா பள்ளிவாசல் மைதானத்தில் முஹிப்புல்லாஹ் உமரீ அவர்களும், மக்கா நகர் ஆயிஷா பள்ளிவாசல் மைதானத்தில் எஸ். இத்ரீஸ் நஜாஹி அவர்களும் பெருநாள் தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள்.

ஹஜ்ஜுப் பெருநாளில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு குர்பானியில் 30 மாடுகளும், 40 ஆடுகளும் இறைவனுக்காக அறுக்கப்ப்பட்டன. பங்குகள் முறையாக வழங்கப்பட்டு 300 க்கும் அதிகமான ஏழைக் குடும்பங்களுக்கு இறைச்சிகள் வழங்கப்பட்டன.

இதில் முபாரக் கமிட்டி தலைவர் சேகுதுமான், செயலாளர் முஹம்மது காசிம், பொருளாளர் அப்துல் மஜீத், ஜபருல்லாஹ் பத்ரி, முஹம்மது கோரி, தஸ்லீம் மசூது, பாவா, கலந்தரி இப்ராஹிம், பைசல் உட்பட நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெருநாள் தொழுகைக்கான ஏற்பாட்டை மஸ்ஜித் முபாரக் கமிட்டி மற்றும் மஸ்ஜித் அக்சா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கடையநல்லூர் நகர காவல்துறையினர் பெருநாள் தொழுகை நிகழ்ச்சிக்காக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தந்தனர்.

எல்லாப் புகழும் அல்லாவுக்கே!
இப்படிக்கு
முகம்மது காசிம்
செயலாளர்.
2

10

Add Comment