திமுகவின் கோடீஸ்வர வேட்பாளர் கே.சி.பழனிசாமி: சொத்து மதிப்பு ரூ. 122 கோடி

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.சி. பழனிசாமியின் குடும்பச் சொத்து மதிப்பு ரூ. 122 கோடி என கணக்கு காட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளராக கே.சி. பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அரவக்குறிச்சியில் கடந்த திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியலையும் சமர்பித்தார்.

அதன்படி கே.சி. பழனிசாமியின் கையிருப்பு ரூ. 24 லட்சமும், வங்கிகளில் வைப்புத் தொகை, நிலைவைப்பு, காலவைப்பு, சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட வகைகளில் ரூ. 68.40 லட்சமும், நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடனீட்டுப் பத்திரங்கள், பங்குகள் மூலமாக ரூ. 28.53 கோடியும், மோட்டார் வாகனங்களாக ரூ. 22.59 லட்சமும், தங்க நகைகளாக ரூ. 45 ஆயிரமும் உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 29 கோடியே 68 லட்சத்து 58 ஆயிரத்து 187 ஆகும்.

மேலும், வேளாண் நிலமாக ரூ 49.79 லட்சமும், வேளாண்மை அல்லாத பிற நிலங்களாக ரூ 10 கோடிக்கும், வணிகக் கட்டடங்களாக ரூ 1.62 கோடிக்கும், குடியிருப்புக் கட்டடங்களாக ரூ 21.53 கோடிக்கும் சொத்து உள்ளதாகவும், இவற்றின் மொத்த மதிப்பு ரூ 63.35 கோடியாகும்.

அவரது மனைவி அன்னம்மாள் பெயரில் நிறுவனங்களில் முதலீடாக ரூ. 1.20 கோடியும், தங்க நகைகளாக ரூ. 95.87 லட்சமும், குடியிருப்புக் கட்டிடங்களாக ரூ. 2.08 கோடியும் உள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 4.29 கோடியாகும்.

Buy Levitra Online No Prescription justify;”>கே.சி. பழனிசாமியின் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அவரது மகன் கே.சி.பி. சிவராமன் பெயரில் ரூ. 53.58 கோடிக்கு சொத்து உள்ளது.

நிறுவனங்கள், கடனீட்டுப் பத்திரங்கள், பங்குகளில் முதலீடாக ரூ. 5.48 கோடியும், மோட்டார் வாகனங்களாக ரூ. 1.14 கோடியும், வேளாண்மை அல்லாத நிலமாக ரூ. 41.64 கோடியும், வணிக கட்டிடங்களாக ரூ. 1.19 கோடியும் உள்ளது.

இவரது மனைவி எஸ். சுதாவிடம் தங்க நகைகளாக ரூ. 75 லட்சமும், பிற வகைகளையும் சேர்த்து ரூ. 85.67 லட்சம் சொத்து உள்ளது.

கே.சி. பழனிசாமியின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேரின் சொத்து மதிப்பு ரூ. 122 கோடியே 8 லட்சத்து 69 ஆயிரத்து 148 ஆகும்.

திமுகவில், அதன் தலைவர் கருணாநிதியை விட கோடீஸ்வர வேட்பாளர் கே.சி. பழனிசாமி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment