தென்காசியில் மேம்பால பணி தாமதம் தமிழ்நாடு தவ்ஹீத் கண்டனம்

தென்காசியில் ரயில்வே மேம்பால பணி தாமதம் ஆவதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென்காசியில் Buy cheap Viagra தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தலைவர் ஜாலுதீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் ஜூலை 4ம் தேதி நடக்கும் ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு பேரணியில் தென்காசி கிளையின் சார்பில் திரளானோர் குடும்பத்துடன் செல்ல முடிவு செய்யப்பட்டது.

தென்காசி ரயில்வே மேம்பால பணிகள் சர்வீஸ் ரோடு அமைக்கப்படாமலேயே துவக்கப்பட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடப்பது பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். சர்வீஸ் ரோடு அமைக்கப்பட வேண்டும். மேம்பால பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தது போல தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் முறையான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Add Comment