மழை வரும்… செங்கோட்டையன்

மழை வரும்…
                            செங்கோட்டையன்
மழை வரும்…மழை வரும்  என்று காத்திருந்தார்கள் மழை வந்தது. ச்சொ..வென்று பொழிந்தது. சாலைகள் எல்லாம் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. மண்ணாலும், கழிமண்ணாலும் கட்டப்பட்ட ஓட்டைக் குடிசை வீடுகள் எல்லாம் தாங்கி நிர்க்க முடியாமல் தரைமட்டம் ஆனது. மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது கல்வி நிலையங்கள் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது மீட்பு பணியினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். இவையெல்லாம்… யாருக்கு தண்ணீர் தேவையோ அவர்கள் வாழும் ஊர்களில் இல்லை!.
எங்கோ ஒரு ஊரில்..எங்கோ ஒரு நாட்டில். ஆனால் நாம் வாழும் ஊர்களில், ஏரி குளங்கள் எல்லாம் வற்றி வரண்டு சூடு போடப்பட்ட உடலைப்போல குளத்தின் சகதிகள் கீரல்களாய் வெடித்து நின்ற போதிலும் தண்ணீர் குடித்துப் பழகிப்போன கால்நடைகள் இன்னும் அந்த குளத்தில் தண்ணீர் கிடைக்கும் என நம்பி மோப்பம் பிடித்து அலைவதுபோல், மாந்தர்கள் கையிலும் தலையிலும் இன்னும் சொல்லப் போனால் இடுப்பிலும் முதுகிலும் கவிழ்ந்த காலிக் குடங்களையும் பாணைகளையும் அதன் கழுத்துகளில் கயிற்றால் விவசாயிகள் தூக்குப் போட்டுக் கொள்வதைப் போல  தொங்கவிட்டுக்கொண்டு தீவரவாதி அலைவதுபோல் நமது மக்கள் நமது ஊரில் அலைந்து கொண்டிருப்பதை பார்க்கின்றபோது  பாவத்தின் உச்சத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.
தொழுகை பள்ளிகளிலும், திறந்தவெளி திடல்களிலும், தனித்தனி அரசியல் கட்சிகள்போல் ஆள்பலம் காட்டுவதுபோல் தொழுகையில் காட்டுகிறோமே தவிர இன்னும் உள்ளுணர்வாய் நாம் ஒன்றுபட்டு ஒருங்கினைந்து ஓர் இறைவனை ஒழுகவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஊரே இப்படி ஒற்றுமையில்லாமல் இருக்கின்றபோது ஊருக்குள்ளும், உறவுக்குள்ளும் இன்னும் சொல்லப்போனால் வீட்டுக்குள்ளும் ஒருவருக்கொருவர் விரிசலாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கணவன் மனைவிகளுக்குள் பிளவு, தகப்பன் மகன்களுக்குள் பிரிவு, தாய் மகளுக்குள் மனஸ்த்தாபம், அண்ணன் தம்பிகளுக்குள் அடிதடி, அக்கா தங்கைக்குள் குடுமிபிடிச் சண்டை, இப்படி நம்மில் எத்தனை உறவுகள் இருக்கின்றதோ அத்தனை உறவுகளுக்குள்ளும் ஆங்காங்கே துண்டிக்கப்பட்ட உறவுகளாகவே வாழ்ந்து வருகிறோம்.  இப்படி பாவங்களை இதயத்தில் சுமந்து கொண்டு பெயரளவில் ஒழு எடுத்துக் கொண்டு எந்த மலையேறித் தொழுதாலும் அழதாலும்  என்ன பலன் இருக்கப்போகிறது.
அழுதாலும் தொழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் என்பதுபோல் நம்மை படைத்த அவனின்றி நமக்கு யார் மழையை தந்துவிட முடியும்?.  எல்லாவற்றின் மீதும் நண்மை தீமைகளை நாம் அறிந்தே வைத்துள்ளோம்.  நல்லது கெட்டதையும் தெரிந்து வைத்திருக்கிறோம், எது நீதீ எது அநீதீ என்பதும் நன்றாகவே தெரியும் இப்படி எல்லாவற்றையும் நன்கு அறிந்து தெரிந்து கொண்ட பின்பும் இரண்டாவது வகையில் மட்டும் நம்மை இனைந்து கொண்டிருக்கிறோம். இதில் நாம் எப்படி படைத்தவனிடம் பாவ மன்னிப்பு பெறமுடியும்? எத்தனையோ உண்மைகளை நாம் உள்ளடக்கிக் கொண்டு பொய்யாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொழுகைப் பள்ளியைக்கூட இப்போது பிறறை தூற்றுகின்ற பள்ளியாக ஆக்கிக் கொண்டு வருகிறோமே, மழைவேண்டி  மறையோனை மண்றாடுகிற திடலில்கூட மற்றவர்களைப் பற்றி குறைகூறுகிறோமே, மாற்று மதத்தினரைக்கூட பேசக்கூடாத மேற்படி இடங்களில் கூட இலை மறைக்காய்யாய் இகழ்கிறோமே பின்பு எப்படி இறைவன் தன்அருள் மழையை இறக்குவான்?.  உடையையும், உடலையும் சுத்தமாக்கிக் கொண்டால் போதுமா?
நம் இதயம் இன்னும் பாவமென்னும் அழுக்குகளால் இருண்டுதானே கிடைக்கிறது. இதை எப்போது தூய்மையாக்கப் போகிறோம்.. நாம் எப்போது ஒற்றுமையின் கயிற்றை பற்றிப் பிடிக்கப்போகிறோம்.. நம் தொழுகைகளும், துவாக்களும் எப்போது கபுலாகப் போகிறது?
நபி மூசா அலைஹிஸ்லாம் அவர்கள் காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பதைவிட கொடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் மூசா என்பதால் மக்கள் அவரிடம் வந்து முறையிட்டு மழைவேண்டி அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்ள மூசாவும் அவர்களை மட்டுமில்லாது சில கால் நடைகளையும் கையுடன் அழைத்துக்கொண்டு  மற்றொரு பகுதிக்கு வந்து படைத்தவனிடம் மன்னிப்புக்கோறியும் துதிசெய்தும் மழைவேண்டி கோறிக்கை வைத்தார்கள்.
இறக்கம் உள்ளவனல்லவா இறைவன். மழையை இறக்கவில்லை மழைக்குப் பதிலாக ஒரு சப்தம் இறங்கியது, …ஏ மூசாவே உங்களில் உள்ளவர்களில் ஒருவர் தொடர்ந்து 40 வருடங்களாக பாவம் செய்தவர் இருக்கிறார் அவரை உடனே உங்களிலிருந்து வெளியேற்றுங்கள் என்று சப்தம் வர, மூசா அவர்கள் வந்திருந்த கூட்டத்தினரைப் பார்த்து மேற்படி விஷயத்தைக்கூறி அவரை வெளியாகும்படி கூற.., யாருமே அந்தக் கூட்த்திலிருந்து வெளியாகவில்லை. ஆனால் சிரிது நேரத்தி;க்கெல்லாம் மழை ச்சோ.. வென்று கொட்டியது நபி மூசா அவர்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை, சற்று முன்புதான் 40 வருடங்களாக பாவம் செய்தவர் இருப்பதாகவும் அவரை வெளியாக்கும்படி சப்தம் கேட்டது தற்போதுவரை இந்தக் கூட்டத்திலிருந்து யாரும் வெளியாகவில்லையே இப்படி மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறதே என்று மூசாவும் அக் கூட்டத்தினரும் திகைத்துநின்ற நிலையில்.
மீண்டும் ஒரு சப்தம் வந்தது … நாற்பது ஆண்டுகாலமாய் பாவம் செய்ததை மனதார ஏற்றுக் கொண்டு தாம் செய்த பாவத்தை ஒவ்ஒன்றாய் உணர்ந்து உள்ளம் உருகி உன்னையின்றி என்னை யாரும் மன்னிக்க இயலாது என்று என்னிடம் மனம் உருகி பாவ மன்னிப்பு கோறியதால் நான் அவர் பாவம்தன்னை மன்னித்து மழையை பொழிவித்தேன் என்றுரைத்தது. இது இறைவனின் இரக்கக் குணத்தையல்லவா காட்டுகிறது. தொழுகை பள்ளிகளிலோ அல்லது திடல்களிலோ தொழ வைப்பவரோ அல்லது தொழுக வந்தவர்களோ எத்தனை பேர் தாங்கள் செய்த பாவங்களை தன் கண்முன் கொண்டு வருந்தியிருப்பார்கள்?. அல்லது தன்னால் பாதித்தவர்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பார்கள்? அபகரித்ததை அள்ளிக் கொடுத்திருப்பார்கள்? அவதூர் பேசியவர்களை அரவணைத்திருப்பார்கள்?. விலக்கியவர்களை விரும்பியிருப்பார்கள் ? நாமெல்லாம் நடிகர்களைப்பார்த்து அணைத்துக் காரியங்களிலும் அனைத்து நபர்களிடமும் அபாரமாக நடிக்க ஆரம்பித்து விட்டோம், நடித்துக் கொண்டிருக்கிறோம்.
மகளை கட்டிக் கொடுக்கும் மருமகன் தன் வீட்டுக்கே வந்துவிட வேண்டும் என்றும், கட்டிய கணவனோடு தனிக் கடித்தனம் போய்விட வேண்டும் என்றும், பிள்ளைகளைப்பற்றி கவலையில்லை ஜாலியாக கணவன் மனைவியாய் கல்யாணம் செய்யும் முன்பும் பின்பும் விரும்புகிறவனோடு சுற்ற வேண்டும் என்றும், அடுத்தவர் வீட்டையும் அமானித சொத்தையும் அபகரிக்க வேண்டும் என்றும், பொதுப் பாதையான தெருவில்கூட தனக்குத் தேவையான படிக்களை கட்டி அபகரித்துக்கொண்டு அடுத்தவர்களின் மனைவி பிள்ளைகளை ஆசைகாட்டி மோசம் செய்து கொண்டு, பிறர் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை தாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று தான் எடுத்த முடிவே நியாயமானதென்று அநியாயமும் அநீதீயும் செய்து கொண்டு தானுன்றித்தனமாக அலைவதும்தான் இன்றைய அன்றாட நாம் நடித்துக்கொண்டிருக்கும் காவியங்கள். இத்தனையையும் இதயத்தில் அழுக்காய் சுமந்து கொண்டு மழைத்தொழுகை தொழுதும் மழை பெய்ய வில்லை என்று யாரை பழி சுமத்துகிறோம்.. நாம் நடித்துக்கொண்டிருப்பதில்  ஒரு அங்கம்தான் ஊராருக்கு அழைப்புக் கொடுக்கும் மழைத் தொழுகை.
இரக்கம் நிறைந்த இறைவனை யாரும் அடுத்த வீட்டவரைப்போல் ஏமாற்ற முடியாது. நல்லவர்கள் இருந்தாலும் தீயவர்களுக்கு தண்டனை தருவதில் தயங்காதவன் வல்ல இறைவன். நாம்  வயல்காட்டில் கழையெடுக்கும்போது சில நல்ல பயிர்களும் எடுக்கப்படுவதுபோல் சில நல்லவர்களும் நம்போன்றவர்களால் தண்ணீரின்றி தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பின்பு எப்படி மழை வரும்? மழை வரும் அவன் நாடினால் மட்டுமே மழை வரும். தொடர்ந்து நாம் அவனிடமே மன்றாடுவோம் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவன் மழை இறக்கும்வரை…
                                     செங்கோட்டையன்

Add Comment