ஊர்மக்களுக்கு ஓர் விழிப்புணர்வு பதிவு

நஞ்சை புஞ்சை விளை நிலங்களை விற்க நீதிமன்றம் தடைபோட்டதால்

வெறிச்சோடியது கடையநல்லூர் சப்-ரிஜிஸ்டர் ஆபிஸ்…

ஊர்மக்களுக்கு ஓர் விழிப்புணர்வு பதிவு:

விளைநிலங்களை மனைகளாக விற்க்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தால் கடையநல்லூரில் மனைகள் வாங்கவோ விற்க்கவோ இயலாமல் உள்ளது.

நாள் தோரும் கோடிக்கனக்கில் ரியல் எஸ்டேட் விற்பனையாகும் கடையநல்லூரில் பெரும்பாலான விளை நிலங்களை மனைகளாக ஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் விற்பனை செய்து அதில் வீடுகளும் கட்டப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக இக்பால் நகர், மதினா நகர், மக்கா நகர், ரஹ்மானியாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மனைகள் புஞ்சை நிலமாகவே இருந்துள்ளது. இவைகள் தான் மனைகளாக விற்பனை செய்து அதிகாமன மக்கள் வீடுகட்டி வாழ்ந்து வருகின்றனர்.

உயர் நீதிமன்ற உத்தரவால் அவசர நிலைக்கு கூட இப்பகுதி மனைகளை விற்க்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையை கண்டு சில ரியல் எஸ்டேட் வியாபாரிகள் மனையை விற்பதற்கு நிர்பந்த நிலையில் இருக்கும் மக்களை கண்டு தங்களின் திருட்டு வலையை வீசிவருகின்றனர்.

எவ்வாறு என்றால் அவர்களின் வறுமை நிலையை கண்டு பல லட்சத்திற்க்கு போகும் மனை அல்லது வீடையோ தற்போது எதுவும் விற்பனை செய்ய முடியாது அதலால் சில லட்சம் பணம் இப்போது தருகிறேன் மனை அல்லது வீட்டை எனக்கு ஒரு பத்திரத்தில் எழுதி கொடுங்கள் நாளை நிலைமை சரியானால் அதை விற்று என் பணம் போக மீதி தந்துவிடுவேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி மக்களை மோசடி செய்யும் வேலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சிலர் இறங்கி உள்ளார்கள்.

இவர்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டு கொள்கிறோம்.

Add Comment