அட்டகுளம் ஊரணியயை தூர்வார களம் இறங்கும் தவ்ஹீத் ஜமாஅத்

fb_img_1477198356498

fb_img_1477198352184

கடையநல்லூர் இக்பால்நகர் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் வகையில் தெப்பக்குளம் தூர்வாரப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண்கிளையின் இந்நற்பணியை தொகுதி MLA உட்பட பலதரப்பட்ட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும்,அரசு அதிகாரிகளும், இப்பணியை பாராட்டி வரவேற்றனர்.

இந்நிலையில் அட்டக்குளம் தெருவின் மேற்குபகுதியில் அமைந்துள்ள ஊரணியையும் தூர்வாருவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து அங்கு சென்று தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாத் நிர்வாகிகள் பார்வையிட்டனர். ஊரணியில் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் நூற்றுக்கணக்கான பன்றிகள் வளர்க்கப்படுவதை கண்டு நிர்வாகிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஊரணியும் நோய்களை ஏற்படுத்தும் பன்றிகளும் தூர்வாரப்பட வேண்டுமென அதுசம்பந்தமான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் நிர்வாகிககள். அறிவிலிகளை புறக்கணித்து தொடர்ச்சியாக Tntj யின் நற்பணிக்கு ஆதரவளித்து வரும் பொதுமக்கள் தோள்கொடுத்தால் இன்சா அல்லாஹ் இதுவும் சாத்தியமே!

Add Comment