கடையநல்லூரில் இதயம் காப்போம் இலவச மருத்துவ முகாம்

கடையநல்லூரில் இதயம் காப்போம் இலவச மருத்துவ முகாம்

கடையநல்லூர் :அக்23 கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து  அப்போலோ மருத்துவமனையும் அனைத்து ரோட்டரி சங்கங்களும் இனைந்து பிறப்பு முதல் 16வயது வரை உள்ள குழந்தைகளில் இதயம் காப்போம் இலவசம் மருத்துவ முகாமை நடத்தியது இதில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஹோதண்டராமன் , அனுராத ஸ்ரீராமன்,அப்ராக், கவுதம், ராஜ்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர் இம்முகாமில் 134 பேர் பங்கேற்று ரத்த அழுத்தம், சர்க்கரை, இசிஜி உள்ளிட்ட இதய பரிசோதனை செய்து கொண்டனர் இதில் 98 குழந்தைகளுக்கு லேசான இயதயக் கோளாறும் 23 குழந்தைகளுக்கு உடனடி இதய அறுவை சிகிச்சை செய்வதும் கண்டுபிடிக்கப்பபட்டது இவர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பிட்டுத்திட்டம் மற்றும் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் மூலம் அறுவை சிகிச்சை செய்ய ரோட்டரி சங்கங்கள் மூலம் சென்னைக்கு அனுப்பிவைத்தனர்

இந்திகழ்சியில் ரோட்டரி கவர்னர் விஜய்குமார், முன்னால் கவர்னர் ஷாஜஹான், புளியங்குடி காவல்துறை துனை கண்கானிப்பாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபூபக்கர் மற்றும் ரோட்டரி அனைந்து சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் இதற்கான ஒருங்கினைப்பை ஹானித் செய்தார்.
செய்தி படம் குறிச்சி.

img-20161023-wa0026

img-20161023-wa0025

img-20161023-wa0023

img-20161023-wa0020

img-20161023-wa0017

Add Comment