கடையநல்லூரில் காணாமல் போன நகை பணம் பெண்ணிடம் ஒப்படைப்பு

img-20161023-wa0033

கடையநல்லூர் அருகேயுள்ள மேலக்கடையநல்லூரைசார்ந்த கவிதா என்ற பெண் தன்னிடம் உள்ள பணம் மற்றும் நகையயை தொலைத்துவிட்டு வருந்தி கொண்டு இருந்த சூழ்நிலையில்,தவறவிட்ட இடத்தில் பணத்தையும் நகையையும் கண்டெடுத்த கடையநல்லூர் தவ்ஹீத் நகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில் கொடுத்து உரியவரிடம் சேர்க்குமாறு கூறியுள்ளார்.

உடனடியாக தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கண்டெடுத்த பணம் 3900 மற்றும் எட்டு கிராம் மதிப்பிலான தங்கப்பொருட்களை ஆகியவற்றை கவிதா என்ற பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

செய்யின் பறிப்பு பணம் கொள்ளை போன்ற திருட்டுகள் நடக்கும் இன்றைய கால சூழலில் இது போன்ற நடக்கும் ஒரு சில சம்பவங்கள் மனிதம் சாகவில்லை என்பதை காட்டுகிறது. கண்டெடுத்து அதனை உரியவரிடம் கொடுக்க வேண்டும் என நினைத்த அந்த பெண்மணிக்கு அதனை உரியவாதிடம் கொண்டு சேர்த்த நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

img-20161023-wa0033

img-20161023-wa0030

img-20161023-wa0027

Comments

comments

Add Comment