நீண்ட நாட்களுக்கு பின் கடையநல்லூர் மக்களை மகிழ்வித்த மழை

எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே..

கடையநல்லூர்
நேற்று மாலை 6, மணிக்கு பிறகு சிறுகச்சிறுக ஆரம்பித்த மழையானது 7:3௦ மணி வாக்கில் கடும் இடியோடு கனமும் தாமதிக்காமல் கொட்டத் தொடங்கியது அருள் மழை.
, சுமார் 2. மணிநேரம் மண் மணக்க மணக்க கூடியும் குறைத்துமாக மண் குடிக்கக்குடிக்க இறங்கியது இறைவனின் அருள் மழை.

காலையில் எழுந்து பார்க்கையில் பலநாள் பசியுடன் கிடந்த பாலகன் பால் பருகியதும் அரைமயக்கத்தில் கண் அயந்தார்போல் அவ்வளவு அமைதி எமது நல்லூர் , மழை வேண்டி பல குழுக்களாக பிரிந்து கூட்டு பிரார்த்தனை செய்தமைக்காக நல்லூர் மக்களை மரம், செடி, கொடிகளும் , பறவைகளும் பரிவோடும் பாசத்தோடு பார்ப்பதுபோல் உணருகிறேன், மரங்களிலும் மின்கம்பங்களிலும், மண்சுவரிலும் கூட்டம் கூட்டமாக குளித்துவிட்டு கூந்தலை நீவிவிடும் பெண்களைப்போல் கூட்டம்கூட்டமாக இறகுகளை அலகால் நீவிவிடும் பறவைகள் காலைவெயிலுக்காக காத்திருப்பது போல் உணருகிறேன் …

, எத்தனை வருடங்கள் காணாமல்போனது இதுபோல் எதார்த்தமாக இயற்கையை ரசித்து பார்த்து, பூமியில் 400 அடி துளையிட்டும் வராத தண்ணீர் வெரும் ஒரு நாள் இரவு 2 மணிநேர மழையில் 40. அடியில் கிடைப்பதாக ஒருசிலர் கூற கேள்விப் படும்போது , இறைவனின் அருட்கொடையை என்னவென்று கூறுவது, அவன் அளப்பெரிய அருளாளனும் , நிகரற்ற அன்புடையோன் …

இனியாவது வீண்விரயம் செய்யாமல் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்துவோம்…

Haider Ali

Add Comment