கடையநல்லூரில் பரபரப்பு! முன்னாள் மந்திரி மஜீத் பேரனை கொலை செய்ய முயற்சி

கடையநல்லூரில் பரபரப்பு பணத்தாசை காட்டி இளைஞர்களை கூலிப்படையாக மாற்றிய துயர சம்பவம்:-
நமதூர் இளைஞர்கள் பகட்டு வாழ்க்கை வாழ்வதற்காக கூலிப்படையாக மாறி நாளை உங்களை கொலை செய்ய முயற்சிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?
ஆம் இன்று நமதூரில் அதிகாலை 2 மணிக்கு வானுவர் தெருவில் நடந்த சம்பவம் நம்மை அவ்வாறு சிந்திக்க தூண்டுகிறது.
வானுவர் தெருவைச் சேர்ந்த மாஜி மந்திரி S.M.A. அப்துல் மஜீத் அவர்களின் பேரன் S.F.அப்துல் காதர் என்பவரை கொலை செய்யும் முயற்சியாக 4 இளைஞர்கள் அதிகாலை 2 மணிக்கு அவருடைய வண்டியில் பிரேக் உயரை கட் செய்தும் பெட்ரோல் டேங்கில் சீனி,மண் போன்றவற்றை போட்டுள்ளனர் அந்த சமயத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்த அப்துல்காதர் தெருவில் பார்த்த போது அந்த இளைஞர்கள் தப்பி ஓடினர், அவ்வாறு தப்பித்த சமயத்தில் அவர்கள் வந்த பைக் ஒன்றை விட்டுச் சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியுற்ற அப்துல்காதர் கடையநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் நடந்த விசாரணையில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மாஜி மந்திரி S.M.A. அப்துல் மஜீத் அவர்களின் மகன்
S.M.சர்புத்தீனின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை முயற்சியை அவர்கள் செய்ததாக அந்த இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்,
மேலும் இதற்காக அந்த இளைஞர்களுக்கு இரண்டு தவணையாக ரூபாய் 50000 தரப்பட்டுள்ளது.
அவர்களின் குடும்ப சொத்து விவகாரத்தில் அப்துல்காதர் முனைப்போடு செயல்பட்டு சர்புத்தீன் செய்த தவறுகளை குடும்பத்தினருக்கு சுட்டிக்காட்டியதே சர்புத்தீன் அப்துல்காதரை கொலை செய்ய கூலிப்படை போல் அந்த இளைஞர்களை செயல்பட வைத்ததன் காரணம் என விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
பாருங்கள் கடையநல்லூர் மக்களே நமதூர் இளைஞர்களின் நிலைமையை, பணத்துக்காக எதையும் செய்ய துணிந்து விட்டார்கள்.
இனியும் நாம் விழிப்புணர்வு பெறவில்லையெனில் நம் இளைஞர்களின் நிலை மிக மோசமானதாக மாற நாம் தான் காரணம்.
நமதூரில் பொதுவாக மகனுக்கு 17 வயதானாலே முதல் வேலையாக 2 லட்சம் செலவழித்து பைக் எடுத்து கொடுப்பது தான் கடமையென எண்ணி பல பெற்றோர்கள் வெளிநாட்டில் உழைக்கிறார்கள்,
கால் கூட எட்டாத சிறுவர்களெல்லாம் பைக் ஓட்டுகிறார்கள்.
சிறுவர்களிடம் மெதுவாகப் போகக் கூடாதா என்று சாலையில் செல்பவர்கள் கேட்க முடியவில்லை இறங்கி உடனே அடித்துவிடுகிறார்கள் அந்த அளவுக்கு மோசமான ரவுடிகளாக வளர்க்கப்படுகிறார்கள்.
தங்களுடைய அன்றாட செலவுக்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார்கள். மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வருமே 20 வயதுள்ளவர்கள்.
இவர்கள் சிக்கியவர்கள் சிக்காமல் இன்னும் யார் யாரை கொலை செய்ய ஊரில் எத்தனை இளைஞர்கள் இருப்பார்களோ என்று எண்ணும் போது மிகுந்த அச்சமாகவும் கவலையாகவும் உள்ளது.
ஆகவே நல்லூர் மக்களே நம் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது நாம் தான் , நாளை நம் பிள்ளையும் இந்த நிலமைக்குத் தள்ளப்படலாம். கவனத்தோடு இருங்கள் நீங்களும் நானும் அவர்களின் பகட்டு வாழ்க்கைகாக கொல்லப்படலாம், இந்த மாதிரி இளைஞர்களின் பலகீனத்தை அறிந்து அவர்களை பயன்படுத்தி கொள்ள சர்புத்தீனைப் போன்ற கொடூரர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிய முடியாது, நாம் தான் நம் இளைஞர்களை பாதுகாக்க வேண்டும்.

இந்த சம்பவம் பற்றிய பத்திரிகை செய்தி
img-20161101-wa0005

Add Comment