நெல்லை குழந்தைகள் நலக்குழு: தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டத்துக்கான குழந்தைகள் நலக்குழுவுக்கு தலைவர், 4 சமூகப்பணி உறுப்பினர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலியில் உள்ள குழந்தைகள் நலக்குழுவுக்கு தலைவர் மற்றும் 4 சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த சமூகப் பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒரு பெண் உள்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும். 35 வயதுக்குக் குறையாதவராகவும் Doxycycline online 65 வயதை பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.

தற்போது நலக்குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக உள்ளோரும் 2-வது பணிக்காலத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குற்றவியல், உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொருளாதாரம், மனையியல், கல்வி, அர

சியல் அறிவியல், பெண்கள் சம்பந்தப்பட்ட பட்டம், ஊரக வளர்ச்சி, சட்டம் அல்லது மருத்துவம் ஆகிய பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஜ்ஜ்ஜ்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ நர்ஸ்ரீண்ஹப் ஈங்ச்ங்ய்ஸ்ரீங் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு சென்னையில் உள்ள சமூகப் பாதுகாப்புத் துறை கள அலுவலரை அணுகலாம். தொலைபேசி எண் 044-26426421-க்கு தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் பெற கடைசி தேதி இம் மாதம் 25-ம் தேதி கடைசி நாள்.

Add Comment