கடையநல்லூர் தொகுதியை தமிழகத்தின் முதல்நிலை தொகுதியாக மாற்ற முயற்சிப்பேன் : காங்.,வேட்பாளர் பேட்டி

கடையநல்லூர் தொகுதியை தமிழகத்தில் முழுமையான மக்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்ட முதல்நிலை தொகுதியாக அமைத்திட முயற்சிப்பேன் என கடையநல்லூர் தொகுதி காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழக காங்., கட்சி பெயர் பட்டியலில் கடையநல்லூர் தொகுதி வேட்பாளராக பீட்டர் அல்போன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். சிட்டிங் எம்எல்ஏவான பீட்டர் அல்போன்ஸ் ஏற்கனவே இருமுறை எம்எல்ஏவாகவும், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பணியாற்றியுள்ளார். தமிழக சட்டசபை காங்., கட்சியின் கொறடாவாக கடந்த 5 ஆண்டுகளில் பணியாற்றிய இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்.,வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது:- “”மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான அரசு இருந்தால் தான் மக்கள் பணிகள் தொய்வின்றியும், தடையின்றியும் மேற்கொள்ள முடியும். மத்திய அரசின் நிதி மூலமாகவும், மாநில அரசின் நிதியின் மூலமாகவும் கடந்த ஐந்தாண்டுகளில் கடையநல்லூர் தொகுதி சிறப்புபெற்ற திட்டங்களையெல்லாம் பெற்றுள்ளது. வரலாற்று புகழ்பெற்றதாக அமைந்திடும் வகையில் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. Buy Lasix Online No Prescription கடையநல்லூர் தொகுதியில் உயர்மட்ட பாலங்கள், புதிய பள்ளிக் கட்டடங்கள், அரசு சுகாதார நிலையங்கள், துணை மின்நிலையங்கள் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் புணரமைப்பு பணிகளாக சுமார் 22 கோடி ரூபாய் செலவில் அனுமதி பெறப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த 50 ஆண்டுகாலமாக பஸ் போக்குவரத்து காணப்படாத வழித்தடங்களில் எல்லாம் தொகுதியின் மையப்பகுதியான கடையநல்லூருக்கு வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியை பொறுத்தவரை மக்களின் கோரிக்கைகள் மக்கள் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டால் கடையநல்லூர் தொகுதியை தமிழகத்தின் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்ட தொகுதியாக மட்டுமின்றி முழுமையான பணிகள் நிறைவுபெற்ற முதல்நிலை தொகுதியாக விளங்கிடும் வகையில் முயற்சிகள் மேற்கொள்வேன்” என்றார்.

Add Comment