புதிய 2000 ரூபாய் நோட் கொண்டு வருவதன் பகீர் பின்னணி..!

புதிய 2000 ரூபாய் நோட் கொண்டு வருவதன் பகீர் பின்னணி..!

புதிய 2000 ரூபாய் நோட் கொண்டு வருவதன் பகீர் பின்னணி..!

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வருகிற 2017 பிப்ரவரி மாதத்தில் புதிய 2000 ரூபாய் தாளை (நோட்) அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்…

இந்த ரூபாய்தாள் புதிய அம்சங்களுடன் இடம் பெறும் என்கிறார்கள். கள்ள நோட்டு அச்சடிக்க முடியாத பாதுகாப்பு அம்சத்துடன் இந்த நோட்டுகள் இருக்கும்.

அதேநேரத்தில், இந்த நோட்டுகள் எங்கே இருக்கிறது என்பதை அதாவது பதுக்கி வைக்கப்பட்டால் எங்கே மறைந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை எளிதில் இருக்கிறது கண்டு பிடிக்க முடியும்.

இந்த ரூபாய் நோட்டுகளில் நேனோ ஜிபிஎஸ் சிப் (Nano GPS Chip) இணைக்கப்படுகிறது. இந்த நேனோ ஜிபிஎஸ் சிப் இயங்க எந்த சக்தியும் தேவை இல்லை. இது சிக்னல் பிரதிபலிப்பானாக செயல்படும், செயற்கை கோள்கள் மூலம் சிக்னல் அனுப்பட்டால், இந்த 2000 ரூபாய்தாள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் வரி எண் வரைக்குமான தகவல்களை பெறமுடியுமாம்.

பூமிக்கு கீழே 120 மீட்டருக்கு கீழே இந்த 2000 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்தாலும் கண்டு பிடித்துவிட முடியுமாம்

ரூபாய் நோட்டுக்கு சேதம் வராமல் நேனோ ஜிபிஎஸ் சிப்-ஐ நீக்குவது என்பது இயலாத காரணமாகும்.

இந்த ரூபாய் தாள்கள் குறித்து மற்றும் அதன் புகைப்படங்கள் குறித்து டூவிட்டர், பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இது குறித்து ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு எதுவும் இது வரை வெளியிடவில்லை.

கறுப்பு பணம் புழக்கத்தை தடுக்கும் விதமாக இந்த சிப் ரூபாய் தாள்களில் வைக்கப்படுகிறது. ஆனால், பணத்தை பதுக்குபவர்களுக்கு இந்த விவரம் தெரியும்பட்சத்தில் அவர்கள் இந்த 2000 ரூபாய்தாள்களை பதுக்குவார்களா என்பது சந்தேகமே?

மத்திய அரசு நினைப்பது நடக்குமா? என்பது நடைமுறையில்தான் தெரியும்.

Add Comment