புதிய நோட்டுகளில் Nano GPS கருவி பொறுத்தப்பட்டுள்ளதா

புதிய நோட்டுகளில் Nano GPS கருவி பொறுத்தப்பட்டுள்ளதா | New Indian currency not has nano GPS ?

மத்திய அரசு புதிதாக வெளியிட உள்ள ரூ.500 , 1000 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட Nano GPS tracker (ஜிபிஎஸ் கருவி) இருக்கும் என்றும், இதன் மூலம், செயற்கைக்கோள் மூலமாக நோட்டுக்கள் எங்கு உள்ளது, யாரிடத்தில் அதிக பணம் உள்ளது என்பதை எளிதில் கண்டறியலாம் என வாட்சப் மற்றும் முகநுல்களில் செய்திகள் பரவி வருகின்றது. ZeeNews போன்ற சில சேனல்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன் உண்மை நிலை என்ன என்பது குறித்து பார்ப்போம்.

தொழில் நுட்ப ரீதியாக இது சாத்தியம் என்றாலும் நேற்றைய தினம் ரிசர்வ் வங்கி கவர்னர் புதிய ரூபாய் நோட்டுகளில் உள்ள புதிய அம்சங்கள் குறித்து அறை மணி நேரம் பிரஸ் மீட் கொடுத்துள்ளார். அதில் புதிய நோட்டுகளில் Nano GPS பொறுத்தப்பட்டிருப்பதாக எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

புதிய நோட்டை அறிமுகப்படுத்தி பேசும் RBI

எனவே இந்த செய்தி அதிகாரப்பூர்வமானது அல்ல. மேலும் ஒரு நோட்டில் Nano GPS கருவியை பொறுத்தினால் உதாரணமாக 2000 ரூபாய் நோட்டில் Nano GPS கருவியை பொறுத்தினால் அந்த நோட்டின் விலை அதாவது அதை தயாரிக்கும் விலை குறைந்த பட்சம் 2500 ரூபாய் ஆகிவிடும் என தொழில் நுட்ப வல்லூணர்கள் கூறுகின்றனர். 2000 ரூபாய் மதிப்புள்ள ஒரு நோட்டிற்கு ரிசர்வ் வங்கி 2500 செலவு செய்யாது.

புதிய நோட்டை அறிமுகப்படுத்தி பேசும் RBI

எனவே தொழில் நுட்ப ரீதயாக இது சாத்தியம் என்றாலும் நடைமுறையில் இது சாத்திமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய நோட்டுக்களில் உள்ள புதிய அம்சங்கள் குறித்து RBI தனது அதிகாரப்புர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை

இதில் எங்கும் Nano GPS tracker குறித்து குறிப்பிடப்படவில்லை.

எனினும் புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் வரும் போது இதன் உண்மை நிலை தெரியவரும். தகவல்கள் தெரிந்தால் சுதாரித்து விடுவார்கள் என்பதற்காக இதை RBI வெளியிடாமல் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் சொல்லப்டுகின்றது.

தற்சயத்தை பொறுத்தவரை மற்ற விசயங்கள் பற்றி குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கவர்னர் Nano GPS tracker குறித்து எதுவும் குறிப்பிடாததால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமற்றது என்பது உறுதியாகியுள்ளது.

புதிய நோட்டுக்கள் குறித்து ரிசர்வ் வங்கி கவனர் நேற்று அளித்த விளக்கம் .

.

Add Comment