2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் வரி மற்றும் அபராதம்

2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் கணக்கு கண்காணிக்கப்பட்டு வரி மற்றும் அபராதம் – மத்திய அரசு

நவம்பரில் இருந்து டிசம்பருக்குள் 2.5 லட்சத்திற்கு மேல் ஒரு அக்கோண்டில் டெபாசிட் செய்யும் போது அந்த அக்கோண்ட் கண்காணிக்கப்பட்டு பயனர் (account holder) கொடுத்த வரவு கணக்கு குளறுபடியாக இருக்கும் பட்சத்தில் வரி விதிக்கப்பட்டு 200 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு இன்று நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.

இது குறித்து மத்திய வருவாய் துறை செயலர் Hashmukh Adhia இன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்

”நவம்பரில் இருந்து டிசம்பருக்குள் 2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யப்படும் அனைத்து வங்கிக் கணக்குகளையும் நாங்கள் ஆய்வு செய்யும். அக்கோண்ட் உரிமையாளர் கொடுத்த வரவு கணக்கை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அக்கோண்ட் உரிமையாளர் கொடுத்த வரவு கணக்கில் ஏதும் குளறுபடிகள் இருந்தால் இந்திய சட்டம் 270(A) ன் படி வரி விதிக்கப்பட்டு 200 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.”

என மத்திய வருவாய் துறை செயலர் Hashmukh Adhia இன்று அறிவித்துள்ளார்.

மேலும் நகை வாங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நகை வாங்குபவர்கள் கட்டாயம் pan காடை சமிர்பிக்க வேண்டும். நகை கடை உரிமையாளர்கள் கட்டாயம் இதை நடைமுறைபடுத்த வேண்டும். இதை செய்ய தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும். வருவாய் துறை செயலர் அறிவித்துள்ளார்.

நாளை வங்கிகளுக்கு பணம் போடச் செல்லும் பொது மக்கள் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Add Comment