ஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..

விரல்விட்டு எண்ணக்கூடிய
கருப்பு பணதாரிகள், கள்ள நோட்டுப் புள்ளிகளை துணிச்சலாக திறமையாக பிடிக்க வக்கில்லாமல், கோடிக்கணக்கான ஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..

நிதானமாக மாற்று வழிகளை சிந்திக்காமல்,
துக்ளக் மன்னர்போல், “”செல்லாது”” என்ற ஒரு அறிவிப்பில், அப்படி என்ன துணிச்சல் திறமை இருந்து விடப்போகிறது.

சரி…அதன்பின்னும்…
இந்த ஏழை இந்திய பொது ஜனங்களுக்கு என்னதான் நன்மை, உயர்வு கிடைத்துவிடப் போகிறது. பின்னும் அவர்கள் ஏழையாகத் தான் இருந்து தொலைக் வேண்டும்.

அவர்கள் வாழ்க்கை திடீரென உயர்ந்திட,
‘செல்லாது என்ற அறிவிப்பு’ என்ன
அலாவுதீன் அற்புத விளக்கா..

தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டு
இப்ப ஜப்பான் என்ன முக்கியம்.
ஜப்பானை வேறு எங்கேனும் தூக்கி அகற்றி வைக்கப் போகிறார்களா

பேங்க் வாசலே தெரியாத முனியாண்டிகளும், நொண்டிகளும், சண்டிகளும், படுக்கை நோயாளிகளும், ஒட்டுமொத்த இந்திய பொதுஜனக் கோடிகள் அனைத்தும் முண்டியடித்துக்கொண்டு இப்போது பேங்க் வாசலில்…
ஊனின்றி உணவின்றி, தவிச்ச வாய்க்கு நீரின்றி தவமாய்…

கோயில் குளங்காள் சுற்றுலாத்தளங்கள் அவசியப் பயணங்கள் சென்றோரின் கதி..
நினைத்துப்பார்க்க முடியவில்லை

பெரிய வியாபாரங்கள் முடங்கிப்போய்,
சிறு வியாபாரகளின் வயிற்றில் அடி விழுந்தாயிற்று..

இதற்குமேல் பொதுஜன தண்டனை என்று
வேறு என்ன இருக்கப்போகிறது.

Abdul Majeeth SK by Fb

Add Comment