கடையநல்லூாில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடையநல்லூாில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் அய்யா அவா்களின் ஆணைக்கினங்க, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் போக்கை கண்டித்தும் ஏழை எளிய மக்களின் துயரத்தை போக்கிட மத்திய அரசு மறுபாிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக இன்று கடையநல்லூா் மணிக்கூண்டு அருகில் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளா் திரு.ஜெயக்குமாா் அவா்கள் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் கடையநல்லூா் ஒன்றிய செயலாளா் மகேஷ், மாவட்ட செய்தி தொடா்பாளா் இசக்கிப்பாண்டி, தென்காசி ஒன்றிய துணை செயலாளா் இசக்கி, ஒன்றி இளையஞரணி செயலாளா் எஸ்பி.சுரேஷ், கடைநல்லூா் நகர துணை செயலளா் சாமி, நகர மாணவரணி அன்பழகன் உட்பட பலா் கலந்துகொண்டனா்.

 

fb_img_1480356645038 fb_img_1480356626176

Add Comment