கடையநல்லூரில் பருவமழை பொய்த்தன் எதிரொலி… தலை தூக்கும் தண்ணீர் தட்டுபாடு..

கடையநல்லூரில் பருவமழை பொய்த்தன் எதிரொலி… தலை தூக்கும் தண்ணீர் தட்டுபாடு..

கடையநல்லூரில் கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பொய்த்தது. இதனால் வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என , பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர் . ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் தென் மாவட்டங்களில் கோடை போல் வெயில் கொளுத்தியது. இதுவரை இல்லாத அளவுக்கு செப்டம்பரில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது.

இதனால் கடையநல்லூரில் உள்ள பல குளங்கள் வறண்டன. கருப்பாநதி அணை வரலாறு காணாத அளவுக்கு நீர்வற்றி வரண்டு போனது அதேபோல் நிலத்தடி நீரோ 500, 1000, அடியென அதளபாதாளம் வரை (ரூபாய் நோட்டு போல்) காணாமல் போனது இதனால் தண்ணீர் தட்டுபாடு தலை தூக்கி வருகிறது… .

நல்லூரில் வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நடவு செய்திருந்தனர். ஆனால் மழை தொடங்கிய வேகத்தில் காணாமல் போனது. நாடா நாடாத உருவான இரண்டு புயல்களால் சிறு தூறல் மட்டுமே இப்பகுதிகளில் கிடைத்தது. இதற்கிடையே பனிபொழிவு அதிகரித்துள்ளதால் இனி மழை வருமா ((வராதா அதுவாவது)) என்பது கேள்வி குறியாக உள்ளது. இரண்டு பருவமழைகளும் ஏமாற்றி விட்டதால் தூர்வாரிய குளங்கள் அனைத்தும் பரிதாப நிலையில் ((வாலண்டர்களை விழையாடவிட்டு)) வானத்தை பார்த்தவாறு உள்ளன. இதனால் கடையநல்லூர் எதிர்நோக்கி இருக்கும் குடிநீர் தட்டுபாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடையநல்லூர் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்… நிறைவேறுமா அல்லது கண்டும் காணாததுபோல் காலம்தள்ளுமா.. பொருத்திருந்து பார்ப்போம்…

Haider Ali

Add Comment