கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

fb_img_1481467391826 கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் லட்சக் கணக்கில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளும் முகம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு பிப்ரவரி 12 நடைபெற உள்ளது. செங்கோட்டை இந்திரா மஹாலில் இது குறித்த செயல் வீரர்கள் & வீராங்கணைகள் கூட்டம் மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமையில் நடைபெற்றது. அதில் வருகை தந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அப்துர்ரஹ்மான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது..
1. பிப்ரவரி 12 நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் லட்சக்கணக்கில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளும் முகம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு நடைபெறுகிறது. இதில் நிறுவனத் தலைவர் பி.ஜைனுல் ஆப்தீன், பொதுச் செயலாளர் முகம்மது யூசுப், மாநிலச் செயலாளர் எம்.எஸ்.சுலைமான், மாநில பேச்சாளர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌஸி, மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் கே.எம்.அப்துந் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
2. இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையே சிறந்தது என்றும் பல்வேறு மத, இன, பண்பாடு, கலாச்சாரம் கொண்ட இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஆகவே அனைத்து சமய மக்களுக்கு தனியார் சட்டம் இருப்பது போல். முஸ்லிம்களுக்குரிய முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றியமைத்து பொதுசிவில் சட்டம் கொண்டுவர நினைக்கும் மத்திய பாஜக அரசை நாங்கள் கண்டிக்கிறோம்.
3. புதிதாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக அரசு கடந்த காலங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் மதவாத கட்சியான பாரதிய ஜனதாயுடம் எந்த ஒரு அரசியல் கூட்டணி வைக்காமல் அதிமுக கட்சியையை ஆட்சியையும் வழிநடத்தினார் அதேபோல் தற்போதைய அதிமுக அரசு செயல் பட வேண்டும் என்றார்

4. நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உடனடியாக புதிய அரசு அறிவிக்கவேண்டும்.

5. செங்கோட்டை புனலூர் அகல இரயில் பாதைப் பணியை துரிதப்படுத்தி விரைவாக இரயில் சேவையை துவங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
66. கருப்புப் பணம் மற்றும் கள்ளப் பணம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்பதில் இந்தியாவின் எந்தக் குடிமகனுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்கான மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை மக்களை அழிப்பதற்கான முடிவாக மக்கள் கருதுகின்றனர். கருப்புப் பண முதலாளிகளை விட்டுவிட்டு பொதுமக்களையும் சிறு வணிகர்களையும் பெரிய அளவில் பாதிக்கச் செய்துவிட்டனர்.
மேலும் பொதுமக்களுக்கு வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காத நிலையில், பாஜக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், அரசு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம் கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுக்கள் சோதனையில் பிடிபடுவது எப்படி? இந்நிலையில் கருப்புப் பணத்தை ஒழிக்க மோடி அரசாங்கம் எடுத்த நடவடிக்கை படுதோல்வியில் முடிந்துள்ளது.
எனவே வங்கிகளில் டெபாசிட் மக்களுக்கு தேவையான பணத்தை எடுப்பதற்கு மத்திய நிதி அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் மாநிலச் செயலாளர் செய்யது அலி, மாவட்டச் செயலளார் முகம்மது தாஹா, பொருளாளர் செய்யது மசூது ஸாஹிப், துணைத் தலைவர் புகாரி, துணைச் செயலாளர்கள் வல்லம் அஹ்மது, சங்கை மீரான், அப்துல்காதர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொண்டரணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி குறிச்சி சுலைமான்.

fb_img_1481467404388

fb_img_1481467396048

fb_img_1481467385494

Add Comment