கடையநல்லூர் பாப்பான்கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புக்கள் என்று கூறி நடவடிக்கை எடுத்தால் போராட்டம்: லிங்கம் எம்.பி.

:கடையநல்லூர் பாப்பான்கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு எனகூறி அங்குள்ள வீடுகளை அகற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் நேரடியாக களமிறங்கி போராட்டங்களை நடத்துவேன் என லிங்கம் எம்.பி. தெரிவித்தார்.

கடையநல்லூர் பாப்பான்கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட புகாரினையடுத்து, இப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதற்கான முதல் கட்டப்ப ணிகள் நிறைவடைந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள், லிஙகம் எம்.பி.யை வியாழக்கிழமை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, வியாழக்கிழமை, கடையநல்லூர் பாப்பான்கால்வாய் பகுதியை லிங்கம் எம்.பி. நேரில் பார்வையிட்டு அப் பகுதியில் வசித்து வரும் மக்களிடம் விபரம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

60 ஆண்டுகளுக்கும் மேலாக இப் பகுதியில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசுத் துறைகளின் மூலம் செய்யப்பட்டுள்ள நிலையில், திடீரன்று அந்த இடம் ஆக்கிரமிப்பு பகுதி என தெரிவித்தால் அவர்கள் நிலை என்னவாகும்.

மேலும் ஓடை ஆக்கிரமிப்பு என்றால், தண்ணீர் ஓட்டத்திற்கு தடை ஏற்படுத்த வேண்டும். அல்லது வெள்ள நேரத்தில் வெள்ள நீர் ஊருக்கும் புகுந்து அழிவினை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இதுவரை அது போன்ற நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை.

அப்படி என்றால் பாப்பான்கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக கூறுவதே தவறு.

இந்நிலையில் வீடுகளை அகற்றுவதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரிதும் வேதனையுடன் உள்ளனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மக்களுக்காகத்தான் அரசும், அதிகாரிகளுமே தவிர அரசுக்காக மக்கள் அல்ல. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இது தொடர்பான நடவடிக்கைகளை அரசு எடுக்க முன்வர வேண்டும்.

இந்தப் பகுதி மக்கள் தாங்களாகவே முன்வந்து சில பகுதிகளை அகற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ள நிலையில், அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஆக்கிரமிப்பு எல்லைக் குறியீடு இடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசியதில் விவசாயிகளிடம் மீண்டும் பேசி முடிவிற்கு வருவதாக கூறியுள்ளார். மேலும் விவசாயிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கலந்து பேசி அதன்பின் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டும். இப் பிரச்னை தொடர்பாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், நானே களத்தில் இறங்கி போராடுவேன் என்றார் அவர்.

Buy Bactrim

Add Comment