பாராட்டு மழையில் நனைந்து நிற்கும் பன்னீர் செல்வம்

பாராட்டு மழையில் நனைந்து நிற்கும் பன்னீர் செல்வம்-

கடந்த வருடம் சென்னையை வெள்ளம் புரட்டிப் போட்ட போது ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசு மகா மெத்தனமாக இருந்ததாக குற்றச்சாட்டு மக்களிடம் எழுந்து அதுவே பிறகு கோபமாக மாறி கடந்த தேர்தலி ல் சென்னையில் உள்ள தொகுதியில் 16 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கைப்ப்பற்ற உதவியது ஜெயித்த தொகுதிகளிலும் ஏதோ அதிர்ஷ்டவசமாகத்தான் அதி முக வெற்றி பெற்றது..

இது எதற்கு என்றால் அரசாங்கம் ஒழுங்காக செயல் படாத பொழுது மக்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் காசு வாங்கிக்கொண்டு வோட்டை மாற்றி போட்டு விடு வார்கள் என்பதற்கே..

ஆனால் இப்பொழுது பாருங்கள்.மக்கள் , பன்னீர் செல் வம் தலைமையிலான தற்போதைய மாநில அரசு துரித வேகத்தில் செயல்படுவதாக மக்கள் பாராட்டு தெரிவித்து ள்ளனர்.இது தான் ஒரு சிறந்த நிர்வாகத்திற்கு மக்கள்
அளிக்கும் பாராட்டு பத்திரம்.இதற்கு முக்கிய காரணம்
ஒருங்கிணைப்பு.மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும்
இடையே உள்ள புரிந்துணர்வு.இது இருந்தால் தான்
ஒரு மாநிலத்தில் எல்லாமே சாத்தியமாகும்.

ஜெயலலிதா ஆளுமையானவர் ஆனால் அடக்கமானவர் அல்ல..ஆனால் பன்னீர் செல்வம் அடக்கமானவர்.அந்த அடக்கம் தான் மத்திய அரசுடன் மாநில அரசை இணைந் து செயல் பட வைத்து மக்கள் நல பிரச்சனைகளில் விரைவாக செயல் பட வைக்கிறது.

பாருங்கள்… புயலில் சிக்கிய சென்னையில் மீட்பு பணிக ளில்மீபன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பம்ரமாக சுழன்று பணியாற்றிக் கொண்டுள்ளது. கடந்த வருடம் சென்னையை புரட்டி போட்ட பெரு வெள்ள சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வீட்டுக் குள்ளேயே முடங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், இம்முறை, பலத்த காற்று வீசியபோதும் கூட முதல்வர் நேரடியாக தலைமைச் செயலகம் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவ்வப் போது முதல்வர் பாதுகாப்பு நெறிமுறைகளை அறிக்கை யாக வெளியிட்டார்.
இரவு 7 மணிவரை மக்கள் வெளி யே வர வேண்டாம் என்பதை கூட முதல்வர் அறிக்கை யாக வெளியிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் அவர் மட்டுமே பேட்டியோ அறிக்கையோ அளிக்க முடியும். அமைச்சர்கள் அதிகார மில்லாமல் வெறும் பொம்மையாகவே இருந்தார்கள் .
ஆனால் இன்றோ மின்சார சப்ளையை இரவுக்குள் சீர் செய்து விடுவோம் என்று பத்திரிகையாளர்களிடம் தைரியமாக பேட்டிளித்தார் அத்துறை அமைச்சர் தங்கமணி.

அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் தங்கள் துறை களின் கீழ் வரும் பணிகளை நேரடியாக மேற்பார்வையி ட்டனர்.
அந்த புகைப்படங்கள் வெளியிடப் பட்டன. அமைச்சர் களும், முதல்வரும் நேரடியாக களத்தில் நின்றதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி சாலை களில் இறங்க வேண்டியதாயிற்று. எனவே பணிகள் தொய்வின்றி நட ந்தன.

கடந்த ஆண்டு வெள்ளத்தின் பொழுது மத்திய அரசு மீட்பு நடவடிக்கைக்கு ராணுவத்தை அனுப்புகிறோம் என்று கரடியாக கத்தியும் மாநில அரசு கண்டு கொள்ள வில்லை கடைசியில் ஏர்போர்ட்டில் வெள்ளம் புகந்த பிறகு அதை சாக்கில் வைத்து மாநிலஅரசின் அனுமதி இல்லாமலே வெள்ள மீட்பு நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டது.

ஆனால் இப்பொழுது பாருங்கள் இப்பொழுது பாருங்கள்
புயல் வரும்முன்னே ராணுவ வீரர்கள் அதை எதிர் கொள்ள தயார் நிலையில் இருந்தார்கள்.
இது தான் மத்தி ய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளில்
கிடைக்கும் நன்மைகள்.

ராணுவ வீரர்கள் ரப்பர் படகுகள், தீயணைப்பு வாகனங் கள், காவல்துறை யினர் என சகல துறையினரும், சாலை களி ல் ரெடியாக நின்றனர். மரங்கள் விழுந்த துமே அப்புறப்ப டுத்தப்பட்டன.
அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்ப ட்டு மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. ஆவின் பால் சப்ளை நாளைக்கு தடை யின்றி சென்று சேர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகாரம் ஒரே பக்கம் குவியாமல் பரவலாக்கப்பட்டால் ஏற்படும் நன்மைகளை இன்று சென்னை மக்கள் கண் கூடா க பார்த்தனர் என்றால் அது மிகையல்ல.
மக்களி டம் பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு செயல் பட்ட விதம் நன்றாக இருந்தது என்று சென்னை மக்கள் பன்னீருக்கு ஜே ..
போடுகிறார்கள்.

Add Comment