கடையநல்லூரில் மீலாது எதிர்ப்பு பொதுக்கூட்டம்

மீலாது எதிர்ப்பு பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பஜார் கிளை சார்பாக மீலாதுக்கெதிரான மாபெரும் தெரு முனைக் கூட்டம் பெரிய தெருவில் நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு கிளைத் தலைவர் குறிச்சி சுலைமான் தலைமை தாங்கினார்.

இதன் துவக்கமாக பொருளாளர் சதாம் ஹுசைன் தவ்ஹீதி உரை நிகழ்த்தினார்கள்.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி இஸ்லாத்தில் பிறந்தநாள் இறந்தநாள் நினைவு நாள் என்பது இல்லை மீலாது விழாவும் கூடாது என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் கிளை துணை செயலாளர் உஸ்மான் நன்றி கூறினார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் தாஹா,சாகிப்,அய்யூப்கான் மற்றும் அனைத்துக் கிளை நிர்வாகிகள் உட்பட பெறும் திரளானோர் கலந்து கொண்டனர்.
img-20161215-wa0019

img-20161215-wa0018

img-20161215-wa0017

img-20161215-wa0016

Add Comment