
Kadayanallur Friends Association 1986 (KFA-1986) மற்றும் Nellai cancer care center இணைந்து நடத்திய ” பெண்களுக்கான இலவச புற்றுநோய் சிறப்பு பரிசோதனை மற்றும் புற்றுநோய் தடுப்பு சிறப்புக் கருத்தரங்கு” 18.12.2016 ஞாயிறு அன்று வானவர் தெருவிலுள்ள தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளியில் வைத்து KFA 1986 செயலாளர் Skமுகம்மது தலைமையில் நடைபெற்ற து.
தாருஸ்ஸலாம் பள்ளி நிர்வாகி அனீஸ் மற்றும் 16 வது வார்டு கவுன்சிலர் அனீஸ் பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். KFA 1986 செயற்குழு உறுப்பினர் KK சிக்கந்தர் ஆசிரியர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கடையநல்லூர் நகராட்சியின் சுகாதார அதிகாரி T ஜெயபால் B.Sc அவர்கள் தனது வாழ்த்துரையில் “வருமுன் காப்போம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
முகாம் ஒருங்கிணைப்பாளர் P முருகன் அவர்கள் புற்று நோய் தடுப்பு பற்றியும் Dr.S.அபிராமி அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு பற்றியும் உரையாற்றினர்.
நிகழ்ச்சியை KFA 1986 செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் ஹுசைன் அவர்கள் தொகுத்தளித்தார்.
இதில் கலந்து கொண்ட 70க்கு மேற்பட்ட பெண்களுக்கு புற்றுநோய் பற்றிய கவுன்சிலிங் தனித்தனியாக வழங்கப்பட்டது. அதில் சுமார் 30 பெண்கருக்கு மார்பகம் மற்றும் கர்பப்பை புற்றுநோய்க்கான பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. சிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை KFA 1986 நண்பர்கள் மற்றும் தாருஸ்ஸலாம் பள்ளியினர் சிறப்பாக செய்திருந்தனர் எல்லா புகழும் இறை்வனுக்கே
KFA 1986 செயலாளர் தனது உரையில் KFA 1986 செயல் திட்டங்களை எடுத்துரைத்தார்.
KFA 1986 செயற்குழு உறுப்பினர் மூவன்னா சாகுல் ஹமீது நன்றியுரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.