எண்ணைய்க் கிணற்றுச் சண்டையா இது?

லிபியா மீது நடாத்தப்படும் தாக்குதல் அமெரிக்காவின் இரண்டாவது எண்ணைய்கிணற்றுக்கான தாக்குதலா? என்று சர்வதேச மட்டத்தில் சந்தேகம் கிளம்பியுள்ளது.

2003ம் ஆண்டு ஈராகில் சர்வாதிகாரத்தை போக்கி அங்குள்ள மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று உலக மக்களின் கண்களில் ம‌ண்ணைத்தூவிவிட்டு சதாமை தூக்கிலிட்டு, அங்குள்ள எண்ணைய் வளத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன.

இங்கு ஒரு கேள்வி, சதாமுக்கு பின்னால் இப்போது ஈராக் மக்கள் அங்கு நிம்மதியாக இருக்கின்றார்களா? (Is Iraqis are happy after Sadham Hussain’s death?) (Is Iraq is a peacefull country after America’s bomb action?) இதை பற்றி பேச, கேள்வி எழுப்ப உலகில் ஆள் இல்லாது போய்விட்டது.

அமெரிக்கா ஒரு சில நாடுகளை கூட்டுச் சேர்த்துக் கொண்டு, மனிதாபிமான நடவடிக்கையில் (Operation Odyssey Dawn) ஈடுபட்டுள்ளதாக பீற்றிக்கொண்டு,லிபிய நாட்டை பாதாள குழியாக்கிக் கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் பல நாடுகள் இதற்கெதிராக குரல் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஈராக் யுத்தம் தொடரும் போது உலகில் பல நாடுகளில் பாரிய யுத்தங்கள் நடந்தேறிக் கொண்டுதான் இருந்தன.
ஆனால் ஏன் அமெரிக்கா ஈராக்கை மட்டும் கருவறுத்தது?

அங்குள்ள எண்ணைய்க் கிண‌றுக‌ளை சொந்தமாக்கவா?

ஆம்!

அதை இப்போது சாதித்து தனக்கு தேவையான ஒருவரை பதவியில் அமர்த்தி நாடகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இப்போது இரண்டாவது நாடாக லிபியா கிடைத்திருக்கின்றது.
ஆப்பிரிக்காவில் பலநாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் இன்றுவரைக்கும் ந‌ட‌ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஏன் லிபியாவை மட்டும் பாதுகாக்க முன் வந்திருக்கின்றது?

இலங்கையில் நீண்ட 30 வருட கால யுத்தம் பல உயிர்களை காவுகொண்டது,பலர் அகதியானார்கள்,

இங்கு அமெரிக்கா அல்லது NATO அல்லது UNO ஏன் கவனம் செலுத்தாமல் இருந்தது?

உலக மக்களே சிந்திக்கும் நேரமிது.

லிபிய மக்களை பாதுகாக்க ஐக்கிய‌ நாடுக‌ள் சபையின் (ஐநாச‌பை) அனுமதியும் கிடைத்திருப்பது அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி.

சிந்திக்க, குரல் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் இது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் பல நாடுகளில் நாளுக்கு நாள் பல யுத்தங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

அவர்களை பாதுக்காகவோ அல்லது புதிய ஆட்சி உருவாக்கவோ விரும்பாதது ஏன்?

அங்கு எண்ணைய்க் கிணறுகள் இல்லை என்பதாலா?

அங்கு வளம் இல்லை என்பதற்காகவா?

அங்கு எயிட்ஸ் நோயாளிகளும் ஏழைகளும் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதற்காகவா?

அந்த நாட்டுக்காக யுத்தம் செய்து அந்தநாட்டு மக்களை காப்பாற்றினால் அவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து உணவும் உடையும் கொடுக்க வேண்டி வரும் என்பதாலா?

மக்களை சிந்திக்கத் தூண்டுவதும் மாற்று நடவடிக்கை எடுக்க ஊக்கப்படுத்துவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ‘மாற்றங்கள் தேவை’யின் சிறப்பு பணி என்பதனால் இந்த கேள்விகளை எழுப்புகின்றது.

லிபியாவில் ’எதிர்பார்த்ததும் எதிர்பார்க்காததும்’ என்று சிந்திக்கும் ஒரு விடயமும் லிபிய சண்டையின் பின்னணியில் இருக்கின்றது.

லிபிய மக்கள் மாற்று அரசாங்கத்தை அமைக்க எதிர்பார்த்தார்கள்.
அங்கு ஏழைகளும் உழைத்து வாழ, கதாபி வெளியேற வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

அங்கு வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆட்சிமாற்றம் மக்களின் எழுச்சிக்கு புத்துயிர் ஊட்டும் என்று எதிர்பார்த்து மக்கள் வீதிக்கு வந்தார்கள்.

ஆனால் இன்று எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் கண்களை கண்ணீரால் கழுவிக் கொண்டிக்கின்றன.

வைத்தியசாலைகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன.

Buy Bactrim style=”text-align: justify;”>புத்துயிர் வேண்டியவர்கள் இப்போது மரணபடுக்கையில்,

நாட்டின் அரசாங்கத்தை மாற்ற மக்கள் புரட்சி தொடங்கியது. ஆனால் நாட்டின் முகவரி ‘அமெரிக்கலிபியா’ வாக மாறப்போகின்றது. இது எதிர்பார்க்காதது.
இவ்வளவு தூரம் மக்களின் போராட்டம் கடந்து வந்ததன் பின்னரும், ’42 வருட ஆட்சி போதும் நான் கொஞ்சம் ஓய்வெடுக்கின்றேன், உங்களில் ஒருவரைதேர்வு செய்து நாட்டை வளப்படுத்துங்கள்’ என்று மனதார சொல்ல முஅம்மர் கதாபிக்கு மனமில்லாதது நாட்டை பிறர் கையில் கொடுக்கும் அவலநிலைக்கு மாற்றியுள்ளது.

ஒரு கதாபியை நாட்டை விட்டு வெளியேற்ற அனைத்து லிபியர்கள் தலையிலும் நவீன குண்டுகளை பாய்ச்சுவது எங்குள்ள மனிதாபிமானம்?

இந்த யுத்த நடவடிக்கை என்று கூறி தன்னை வளப்படுத்த எத்தனை பிஞ்சு குழந்தைகளை கொன்று குவிக்கிறது? முடமாக்குகின்றது?

குழந்தைகள் நடக்கும் வயதை அடையும் முன்னரே உலகைவிட்டு அவர்களை பிரித்துவிட முயற்சிப்பது முழு எதிர்கால பரம்பரையையும் (Future generation of Libya) திட்டமிட்டு அழிக்கும் ஒரே ஒரு நோக்கம்தான் என்றே சொல்ல வேண்டும்.

இதைத்தான் ஈராக், ஆப்கானிஸ்தான், பலஸ்தீன் போன்ற நாடுகளில் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கதாபி என்கின்ற சர்வாதிகாரியை வெளியேற்ற வேண்டும் என்று முன்வந்துள்ள நாடுகள் ஏன் அங்குள்ள மக்களை பற்றிச் சிந்திக்க தவறியுள்ளன?
அங்குள்ள சொத்துக்கள், வளங்கள் என்னவாகும்?

மீண்டும் அப்படி ஒரு நாட்டை கட்டி எழுப்ப அமெரிக்காவோ அல்லது துணை நாடுகளோ உதவி செய்யுமா?

முஅம்மர் கதாபிக்கு ’மாற்றங்கள் தேவை’ சொல்லுவது; யுத்தம் செய்துதான் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற தேவை இப்போது கிடையாது.

முடியும் வரைதான் யுத்தம் செய்வோம் என்றால் நாடு முழுமையாக இரத்த ஆறாய் மாறும் வரை யுத்தம் செய்ய வேண்டும்.

மனிதர்கள் வாழ்ந்த பூமி எலும்புக் கூடுகள் தேடும் பூமியாய் மாறும் வரை தான் யுத்தம் செய்யவேண்டும்.
தேவையா இது?

அமெரிக்கா, NATO மற்றும் UNO வுக்கு ’மாற்றங்கள் தேவை’ சொல்லுவது;

ஒரு சதாம் ஹுசைனை பிடிக்க முழு ஈராக்கையும் அழித்து, ஈராக் மக்களை அகதியாய், ஏழையாய், அநாதைகளாய், அங்கவீனர்களாய் மாற்றியது போல்லிபியாவை மாற்ற முயற்சிக்க வேண்டாம்,

கதாபி என்கின்ற சர்வதிகாரியிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றால் முதலில் குண்டு மழை அல்ல தீர்வு.

அப்படியென்றால் அங்கிருந்து மக்களை அகற்ற வேண்டும், அல்லது லிபிய மக்கள் மீது அதிக ஆர்வம் இருந்தால் அவர்களை உங்களுடைய நாடுகளுக்கு மீட்டெடுங்கள், பின்னர் யுத்தம் பற்றி சிந்திக்கலாம்.

இதனை எப்போதும் செய்ய மாட்டீர்கள் என்பது அறிந்ததே.

லிபியா மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு நான் அனைவரும் பிரார்த்திப்போம்.

Add Comment