தெண்டத்துக்கு போனது…, தண்டக்கார ஓடை… -செங்கோட்டையன்.

தெண்டத்துக்கு போனது…, தண்டக்கார ஓடை…
செங்கோட்டையன்.

நம்ம ஊர் பாஷையில் தெண்டத்துக்கு என்பதை எந்தெந்த இடத்தில் சொல்வார்கள் என்பதைப் பார்ப்போம். தெண்டத்துக்கு வளர்ந்திருக்கிறான் பாரம்மா.., என்றும். அவன் கடையிலபோய் வாங்குனம்மா எல்லாம் தெண்டமா போச்சு.., என்றும். ஏலே.. தெண்டச்சோறு தந்தல ஒன்னே வளத்தேன்.., என்றும் சொல்வார்கள் அப்படியானால் இன்றைய வழக்கப்படி வீணாக என்ற அடை மொழியைக் கொள்ளலாம் ஆம்.., வீனாகிப் போனது தண்டக்கார ஓடை என்பதைவிட காணாமல் போனது தண்டக்கார ஓடை என்ற பொருளும் ஆகும்.
கம்மாக்குளம் என்ற பெயரில் இருந்த குளம் தண்ணீரால் பெருகும் போதெல்லாம் அட்டை எனப்படும் அட்டைப்பூச்சீ எனப்படுபவை வெள்ளத்தில் அதிகமாக அடித்து வரப்பட்டு குளத்தில் குளிப்பவர்கள் உடலில் ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறுஞ்சுவதால் குளத்தில் குளிக்க வருபவர்களை அட்டைப்பூச்சியை சொல்லி எச்சரிப்பார்கள். அதை காலப்போக்கில் கம்மாக்குளம் அட்டக்குளமாக பெயர் மாற்றம் பெற்றது.
அட்டக்குளத்தில் தண்ணீர் நிறைந்து விட்டால் குளத்தின் வடக்கு கறையோரப் பகுதியிலும், தெற்க்கு ஓரப்பகுதியிலும் பழைய மொழியில் கலிங்கி என்று சொல்லப்படும் தடுப்பில்லாத மதகு எனப்படும் சுமார் 50 அடிநீளம். 3 அடி அகலம் 4 அடி உயரம் சிமிண்டால் கட்டப்பட்ட தடுப்பு அணையில் மறுகால் பாய்ந்து கிழக்குப் பகுயில் உள்ள குளங்களுக்கு நீர் நிறம்பச் செய்யும். இதைப் போலவே அட்டக்குளத்தின் தென் கோடியிலும் ஒரு தடுப்பு அணை உண்டு அதன் வழியாகவும் குளத்தின் தண்ணீர் மறுகால் பாய்ந்து அதற்கு கிழக்கே உள்ள குளங்களுக்கு நீர் நிறம்பச் செய்யும். தெற்க்கே உள்ள இந்த அணையைப்பற்றி நமக்கு இப்போது பிரச்சினையில்லை! அட்டக்குளத்தில் வடக்குள்ள அதாவது அட்டக்குளத்தெருவிலுள்ள கீழவட்டாரத்தின் தெற்க்குப் பகுதியிலுள்ள தண்டக்கார ஓடையைப்பற்றிதான் இப்போது பிரச்சினை.
கலிங்கி 50 அடி நீளம் என்றாலும் அட்டக்குளம் அணைக்கு கிழக்கு தண்டக்கார ஓடை சுமார் 100 அடி அகலமாக ஆரம்பித்து கிழக்கே மாவடிக்காலின் வட பகுதியிலுள்ள இரல்வே பாலத்தை அடையும்போது தற்போதுள்ள அளவை மனதில் கொள்ளலாம். முந்திய காலங்களில் கலந்தரி பள்ளிவாசல் தெற்கும் மேல்புரமும் மய்யவாடியாகயிருந்தது. கலந்தரி பள்ளிவாசலுக்கு பின்புரம் ஒரு பூவரச மரம் ஒன்று நின்றது அட்டக்குளம் நிறைந்து மறுகால் பாய்கின்றபோது அந்த பூவரசம் மரம் வேர் பகுதிவரை தண்ணீர் வரும் மிகுந்த தெளிவாக அங்கெல்லாம் குத்தவைத்து குளித்த ஞாபகம் இருக்கிறது. தறிநெய்கிற கால கட்டங்களில் தெருக்களில் பாவு போட இடம் கிடைக்கவில்லையென்றால் சின்னத்தெரு என்று சொல்லப்படும் கலந்தர் பள்ளிவாசல் தெருவிற்கு தெற்கு தண்டக்கார ஓடைக்கு தெற்கும் தற்போதுள்ள தக்வா தெருவில் கட்டப்பட்டிருக்கும் வட பகுதி வீட்டிற்க்கு வடக்கே இரண்டு மாட்டு வண்டி போகிற அளவு இடம் இருந்தது அதில் இரண்டு பாவு போட்டு ஆத்துகிற அளவு அகலமாக இடம் கிடந்தது. அதைப்போல் தெப்பத்திற்கும், தண்டககார ஓடைக்கும் இடையில் நான்கு பாவு போட்டு ஆத்திய காலங்களும் உண்டு. பிலால் பள்ளி முக்கில் கலந்தர் மஸ்தான் தெருவில் தற்போது கோணத்தெருவில் தென்புரம் சுமார் குறிப்பிட்ட அடி இடம் மட்டும்தான் இருந்தது ஆனால் இப்போது ஓடை தெருவாகிவிட்டது வடிவேல் காமெடியில் கிணற்றை காணவில்லை என்பதுபோல் 55 அடி தண்டக்கார ஓடையைக் காணவில்லை. தற்போது பாத்திமா நகராக இருக்கும் இடத்தை நாங்களே பரம்பரை பரம்பரையாக பராமரிப்பு செய்ததாகவும் அதை விற்பனை செய்யும் காலத்தில் தங்களுக்கும் கணிசமாக பங்கு வேண்டும் என்று கூறி தண்டகார ஓடைக்கு வடக்கே இருந்த இரண்டு வண்டி போகிற இடத்தையும் மேற்க்கிலிருந்து கிழக்குவரை ஒட்டுமொத்தமாக ஆட்டையைப் போட்டுவிட்டார்கள் ஒரு குடும்பத்தைச்சார்ந்த ஒரு வீட்டுக்காரர்கள். கிட்டத்தட்ட சுமார் 300 அடி நீளம். 20 அடி அகலம் இடத்தை ஒரு வீட்டுக்காரர்கள் அபகரித்ததை தொடர்ந்து இவர்கள் போட்ட அடிவானம் இதுமட்டுமில்லை, அட்டக்குளத்திலுள்ள ஒண்ணாமடை என்று சொல்லப்படுகிற தண்ணீர் போகும் வாய்க்கால் கிழக்கே உள்ள தெப்பத்திற்கும் ரயில்வே தண்டவாளத்திற்கும் கிழக்கே உள்ள குளம் மற்றும் வயல்களுக்கும் தண்ணீர் வரும் ஓடையை ஒவ்வொரு முறை நெல் பயிறிடும் போதெல்லாம் வரப்பையும் வாய்க்காலையும் சீர் செய்வதாய் நினைத்துக் கொண்டு ஒண்ணா மடை வாய்க்காலை வடக்கே வெட்டிக் கொண்டே வந்து தற்போதைக்கு நாங்கள் விவசாயம் செய்த இடமாக காட்டி பிறகு முன்பு வண்டித் தடத்தை அபகரிக்கப்பட்ட இடம் தன்னுடைய இடமாக காட்டி மேற்கிலிருந்து கிழக்கு தெப்பத்திற்கு தண்ணீர் போகும் மதகு வரை தனக்கும் தன் ஒரு வீட்டுக் குடும்பத்திற்கு மட்டும் சொந்தமாகிக் கொண்டு தெண்டமாகிப் போன தண்டக்கார ஓடையின் தென் பக்கம்போல் இப்போது ஒண்ணாமடையின் வடபக்கத்தையும் ஆட்டையைப் போட பார்க்கிறார்கள் ஊரைவித்து தன் உலையில்போட்ட ஒரு வீட்டுக் கூட்டம். இவர்கள் இவ்வாறு இருக்க தண்டக்கார ஓடையின் வடபகுதில் வாழ்ந்தவர்கள் தங்களுக்குள்ள இடத்தின் தென்பகுதியை தனக்கென தக்கவைத்துக் கொண்டார்கள். கலந்தர் மஸ்தான் கீழத்தெருவின் தென்புரமும் ஆசாத் தெருவின் வடபுரமும் உருவாக காரணமாகி விட்டது. தண்ணீர் தடங்கள் தடைபடும்போது மழை வரத்து குறைந்துபோகும் என்பார்கள். எத்தனை உண்மையாகி விட்டது. தண்டக்கார ஓடை தெண்டமாகிப் போனது எத்தனை உண்மையாகிப்போனது. இப்போது சில வீடுகளில் தண்டக்கார ஓடையை 5 அடியாக்கி மேம் பாலம் போட்டுக் கொண்டார்கள் இவர்கள் எல்லாம் இஸ்லாத்தில் இருப்பவர்கள். இஸ்லாம் என்ன சொல்கிறது அடுத்தவர் இடத்தை எந்த அளவு அபகரிக்கிறார்களோ அதனளவு கணமான இரும்பு சங்கிலி நெருப்பிலிடப்பட்டு மறுமை நாளில் கழுத்தில் தொங்கவிடப்படும் என்று. இவர்கள் சொல்வதெல்லாம் அது புறம்போக்குதானே என்று. இப்போது தெருக்களையும் வீடுகட்டுவதாய் சொல்லிக் கொண்டு தெருக்களில் படிகளை கட்டிக் கொண்டு தெருவையும் அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணன் தம்பி சொத்துக்களையும் அனாதைகளின் அமானிதங்களையும் அபகரிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் எத்தனையோ நல்லவர்களையும் வல்லவர்களையும் இந்த நல்லூர் தாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அண்ணன் இறந்துபோனால் அவருக்குறிய வாரிசாகவும் பங்குதாரராக மனைவி மக்கள் இருந்தாலும் இறந்துபோனதால் சொத்தில் பங்கில்லை என்று துணிந்து சொல்கிறார்கள,; அதையும் சில புண்ணியவான்கள் ஆமோதிக்கிறார்கள். தம்பி இறந்து போனால் அவருக்குறிய வாரிசுகள் இருந்தும் சொத்தை பங்கிட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள். அதையும் ஆமாதித்து ஒரு வட்டார வல்லுனர்களே வாதம் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் இன்னும் எத்தனை காலங்கள் அபகரித்த இடங்களில் தங்கிவிடப் போகிறார்கள் மையாமாகிப் மண்ணில் மக்கிப் போவதை மறந்து விட்டார்களா? இல்லை மையவாடிக்கு போகமாட்டோம் என்று இறுமாப்புக் கொண்டு திரிகிறார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று நாம் சொல்லப் போவதில்லை! அவரவர்கள்தான் மறுமை நாளில் தன் செயலுக்கு பதில் சொல்ல வேண்டும்.

Add Comment