கோக் பெப்சி :”விஷம்” என்று எழுதித்தான் விளம்பரம் செய்து விற்க வேண்டும்

தினசரிகளில் வருகின்ற முழுப்பக்க அளவு கோக் பெப்சி கம்பெனிகளின் குளிர்பான விளம்பரங்களை கண்டால் அவசியம்… அதில் * போட்டு அதற்கான விளக்கமாக அந்த பக்கத்தின் அடியில் மிகச்சிறிதாக நுணுக்கி எழுதப்பட்ட செய்திகளை அவசியம் பூதக்கண்ணாடி அணிந்து படியுங்கள்.

தற்போது இந்த கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக அரசு நமக்கு செய்யும் ஒரே நல்ல விஷயம் இதுதான். விஷம் விற்க அனுமதி தந்து விட்டு… அதன் அடியில் “விஷம்” என்று எழுதித்தான் விளம்பரம் செய்து விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறதே..! நாம் எவ்வளவு பெரிய பாக்கியம் செய்த அதிர்ஷ்டசாலி நன்மக்கள்..!

அந்த பொடி எழுத்துக்களில் கீழ்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

*Terms and conditions:
Contains added flavors. Contains #artificial_sweeteners.
This carbonated water contains an admixture of #aspartame and #acesulfame_potassium. Not recommended for #children. Not for #phenylketonurics.

அஸ்பர்டேம் மற்றும் ஏஸ்சல்ஃபேம் பொடாசியம் ஆகிய இவை இரண்டும்தான் ஆர்டிபிஷியல் ஸ்வீட்நெர்ஸ்.

அவை குழந்தைகளுக்கு உகந்தவை அல்ல. ஃபினைல்கீடோநியூரிக்ஸ்களுக்கும் உகந்தவை அல்ல.
என்றால்… அவை அவர்களுக்கு என்ன கேடு செய்யும்..?

#அஸ்பர்டேம் ஏற்படுத்தும் கொடிய விளைவுகள்:-

புற்றுநோய், வலிப்பு, தலைவலி, மன அழுத்தம்.
கவனிப்பு பற்றாக்குறை கோளாறு, தலைச்சுற்றல்.
உடல் எடை கடுமையாக கூடுதல் மற்றும் இவர்களுக்கு பிறக்கும் குழந்தையில் ஏற்படும் பிறப்புக்குறைபாடுகள்.

#ஏஸ்சல்ஃபேம்பொடாசியம் ஏற்படுத்தும் கொடிய விளைவுகள்:-

தலைவலி, மனத்தளர்ச்சி, குமட்டல், மனக்குழப்பம், கல்லீரல் கோளாறுகள், சிறுநீரக கோளாறுகள், பார்வை தொந்தரவுகள் மற்றும் புற்றுநோய்.

இவை குழந்தைகளுக்கு அந்த 200ml ல் கேடு உண்டாக்கி விடக்கூடியவை. ஆனால்… பெரியவர்கள் அதிகளவுக்கு உட்கொண்டால் இதே கேடு அவர்களுக்கும் உண்டுதான்.

அப்புறம் அதென்ன “phenylketonurics”..?

இவர்களால் செயற்கையான மேற்படி ஸ்வீட்நெர்ஸ்களை ஜீரணித்து வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்த இயலாது. அவை உடலில் தேங்கி… வலிப்பு ஏற்பட்டு, மூளை பாதிக்கப்பட்டு நிரந்தர மனநோயாளி ஆகிவிடுவர்.

குறிப்பு:
இப்பதிவில் குளிர்பானங்களில் கலந்துள்ளதாக சொல்லப்படும் பூச்சிக்கொல்லிகள் குறித்து நாம் ஏதும் பேசவில்லை; அவை விளம்பரத்தில் வராததால்..!

Add Comment