கடையநல்லூர் தற்காலிக தாலுகா அலுவலகம் அதே இடத்தில் நிரந்தரமாக

திருநெல்வேலி ஆட்சித்தலைவரை கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினார்

             திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் மு.கருணாகரனை இன்று (28.12.2016) கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.

              இச்சந்திப்பின்போது கடையநல்லூர் தாலுகா அலுவலகம் நகர எல்கையிலே அமைய வேண்டும் என சட்டமனறத்தில் பேசிய போது மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் அனுமதியோடு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.உதயகுமார் அவர்கள் தாலுகா அலுவலகம் கடையநல்லூர் எல்கையிலே அமைக்கப்படும் என்றும் அதற்குரிய இடத்தை ,மாவட்ட ஆட்சித்தலைவர் விரைவில் சட்டமன்ற உறுப்பினரின் அனுசரணையோடு பரிந்துரை செய்வார் என இரண்டு முறை உறுதியளித்தார்.

               இதனடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இப்பணிகளை விரைவாக முடித்து தர கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ அவர்கள் வலியுறுத்தினார். இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பதிலளித்தார்.

                தொடர்ந்து கடையநல்லூர் அரசு மருத்துவமனை பிணயறை பகுதி வளாகத்தில் தடுப்புச்சுவர் ஏற்படுத்த வேண்டும் எனவும், குளிரூட்டப்பட்ட பிண யறையாக தரம் உயர்த்திட வேண்டும் என்பதையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட வழிப்பாட்டுதலங்கள், கல்வி நிறுவனங்கள், நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக காசிதர்மம் பகுதியில் உள்ள விஸ்டம் பள்ளிகூடம்  அருகில் உள்ள மதுக்கடையை அகற்றிட பல முறை வலியுறுத்தியும் இதுவரை அகற்றப்பட வில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். கருப்பாநதி பகுதியில் உள்ள கலைமான் நகர் மலைவாழ் மக்கள் கல்விகற்க வசதியாக அரசு பேருந்து ஏற்படுத்திடவும், கடையநல்லூர் நகராட்சி பகுதியில் மிக பெரிய சவாலாக உள்ள குடிநீர் பிரச்சனையை மாநில அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும், நகர்மன்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து வலியுறுத்தியும் இது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்ற வேதனையை குறிப்பிட்டதோடு அதிகாரிகளின் கவனக்குறைவால் புதிய குடிநீர் இணைப்பு பணிகள் ஒரு மாதத்திற்கு மேலாக தாமதிக்கப்பட்டு வருகின்றது என்றார். இப்பிரச்சினையில் குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் என மும்மட்டத்திலான நடைவடிக்கை ஒருங்கிணைந்த வகையில் இருந்தால் தான் குடிநீர் பிரச்சனைக்கு உரிய தீர்வு ஏற்படும் என்பதால் மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரிகளை அழைத்து தீர்வு காண வலியுறுத்தினார்.

              வடகரை செங்குளம், கடையநல்லூர் அட்டைக்குளம், சீவலங்கால்வாய் உள்ளிட்ட குளங்களை தூர் வாருவதொடு கழிவு நீர்களால் ஏற்படும் சுகாதாரசீர் கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதோடு பாதாளசாக்கடை திட்டத்தை கொண்டு வர மாவட்ட ஆட்சித்தலைவரை வலியுறுத்திய போது. தானும் முயற்சிப்பதாகவும் சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையாளரை சட்டமன்ற உறுப்பினர் சந்தித்து வலியுறுத்தவும் கேட்டுக்கொண்டார்.

                பல்லாண்டுகாலமாக கடையநல்லூர் நகரத்தில் கிடப்பில் உள்ள காயிதே மில்லத் மணி மண்டபம் உருவாக்கும் பணிகளுக்கு உரிய ஆணையை விரைவாக வழங்கிட வலியுறுத்தினார்.

இறுதியாக 07.01.2017 அன்று நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைக்க உள்ளதாக சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கரிடம் மகிழ்வுடன் தெரிவித்தார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர் தென்காசி முகம்மதலி, மாநில ஊடகப்பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் மேலப்பாளையம் அப்துல் ஜப்பார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாட்டப்பத்து கடாபி  ஆகியோர் உடன் இருந்தனர்

Add Comment