தலாக்…விவாதிக்க வேண்டிய விஷயங்கள்-செங்கோட்டையன்

தலாக், என்கிற விவகாரத்து சமீப காலங்களில் நம் ஊர்களில் மட்டும் இல்லை, உலக நாடெங்கிலும் அநேக இடங்களில் நடக்கிறது.., நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கான காரணங்கள் சரியான முறையில் அலசி ஆராயப்படுவதில்லை! சில விவகாரத்து செய்கிற நேரங்களில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் வெளிவரத் தயங்குகின்றது. சில விவகாரத்துக்களில் சில காரணங்களே ஒளிந்து கொள்கிறது. அல்லது மறைக்கப் படுகிறது. இவைகளை எல்லாம் அலசி ஆலோசித்து சரியான தீர்வுகள் கண்டு நியாயமானவற்றை எடுத்துக்கூறி தம்பதியினனரை சேர்த்து வைக்க முடியாமலும், அவர்களை பிரித்தே ஆகவேண்டும் என்று மார்தட்டிக்கொண்டு நிர்க்கும் நபர்களை. சமாதானம் செய்து விவகாரத்து வரை போகாமல் சுகுமமாக இருவரையும் வாழ வைக்க முடியாமலும் சிலரால். சில குடும்பத்தினரால் முடியாமல் போகிறது.
சில பாகப் பிரிவினைகளும் அப்படித்தான் நடக்கிறது. அண்ணன் தம்பிகளின் பாகப் பிரச்சனைகளில் அடுத்தவர்கள் மூக்கை நுளைத்துக் கொண்டு உதவி செய்தவர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு சுகுமமாக பிரிய விருக்கும் விஷயங்களை பூதகரமாக உருவாக்கி போலீஸ் கோர்ட்டுமாக்கி பாவம் பாகம் வாங்கி அதை விற்றும் கடன் காரனாக்கி விடுகிற நிலைக்கு ஆளாக்கி விடுகிறார்கள் குடும்ப பெரியவர்கள் நல்லவர்கள் என்று நினைப்பவர்கள்.
இதற்கெல்லாம் காரணம் என்ன?
அறியாதவர்களாக.., புரியாதவர்களாக.., விளக்கம் தெரியாதவர்களாக இருந்து விட்டால் நமக்கெல்லாம் ஒன்றும் தெரியாது. ஐவேளையும் தொழுகைக்கு செல்கிறோம். பள்ளிகளில் தொழுகை முடிந்து இறைவனிடத்தில் கூட்டாகவோ, தனியாகவோ இரு கைகளையும் ஏந்தி செய்த பாவங்களை முறையிட்டு பாவ மன்னிப்புக் கோருகிறோம். ஹதீஸ்களை கேட்கிறோம். சகாபாக்களின் வரலாறுகளை மனக் கண்முன் கொண்டு வருகிறோம். ஆனால் அவைகளை எல்லாம் பள்ளியின் வாசலுக்கு உள்ளேயே விட்டு விட்டு வெளியே வந்து நியாயம் இல்லை என்று தெரிந்தும் வக்கலாத்து வாங்கிக் கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு போகிறோம். ஏன் இப்படியொரு அவல நிலை நமக்கு?
இதற்கெல்லாம் என்ன காரணம்?
இதுபோன்ற நிறைய விஷயங்களை நாம் இங்கே குறிப்பிடலாம், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள வழக்குகள், மாமியார் மருமகள் வழக்குகள், மதினி நாத்தனார் வழக்குகள், பொதுச்சுவர் வழக்குகள், சின்னப்பிள்ளை அடிதடி வழக்குகள். இப்படி இன்னும் எத்தனையோ பிரச்சினைகள் அன்றாட அடுத்தடுத்த நேரங்களில் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் கோர்ட்டுகளில் தீர்க்கப்படாமல் குவிந்து கிடக்கும் வழக்குகளைப்போல் பிரச்சினைக்கு உரியவர்களை அழைத்து நியாயமான தீர்ப்புகள் வழங்கி தப்பு செய்கிறவர்களை தண்டிக்காமல் தப்பை அவர் உணர வைக்க தவறி தப்பு செய்தவருக்கு வக்கலாத்து வாங்கிக் கொண்டு பிரிவினைக்கும், பிரச்சினைக்கும் வழி வகுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்
இதற்கெல்லாம் என்ன காரணம்?
இறைவனின் பயம் இரு கைகளை ஏந்துவதோடு நின்று விடுவதாலும், இறையச்சம் இதயம்வரை கொண்டு செல்லாததாலும்.. என்றுதான் சொல்ல முடியும்.
வட்டிக் கடைக்காரன் தன் வியாபாரத்தை ஏழைகளுக்கு அதாவது வட்டி வாங்குபவர்களுக்கு உதவுவதாய் உணர்வதைப் போல், தப்பு செய்கிறவர்களுக்கு தாம் நியாயம் செய்வதுபோல் தவறு செய்பவர்களுக்கு வக்கலாத்து வாங்குகிறவர்கள் சரியென்றும், நியாயமென்று உணர்வதுதான் காரணம்.
முந்தைய காலங்களில் எத்தனையோ தலாக்குகளையும், புலாவு விவகாரங்களை வழக்காக எடுத்துக் கொண்ட பெரியவர்கள். தலாக் செய்யப்பட்ட தம்பதியினரைக்கூட வயதானவர்களுக்கு மறுமணம் செய்வித்து மீண்டும் கணவன் மனைவியாக வாழ வைத்த சரித்திரங்கள் எத்தனையோ நடந்திருக்க.., இப்போதெல்லம் ம் என்றாலும் ஆம் என்றாலும் தலாக்தான். ஆண்கள் கொடுக்கும் தலாக்கைவிட பெண்கள் கொடுக்கும் புலாவுதான் அதிகம்.
அண்மை மாதங்களில் நம் ஊரில் எனக்கு தெரிந்த.. உறவால் நெருங்கிய இரண்டு மூன்று புலாவுகள் நடந்தேறி விட்டது. ஆம் மனைவிகள் கணவனை தலாக் சொல்லி விட்டார்கள். அவைகளை பெண் தரப்பு உறவுகளும் அங்கிகரித்து இருக்கிறது? இந்த உறவுகளுக்கு என்ன நடந்ததென்று விசாரிக்க நேரமில்லை, கணவனையும், மனைவியையும் நேரில் எதிரும், புதிருமாக நிறுத்தி தப்பு தன் தரப்பினரிடம் இருந்தாலும் தண்டிக்க திராணியில்லாத உறவுகளாய் போய் விட்டது.
கணவன் குடிகாரனா? இல்லை!
கொடுமை படுத்துகிறவனா? இல்லை!
சூதாட்டக் காரனா? இல்லை!
வப்பாட்டிக்காரனா? இல்லை!
ஆண்மை குறைந்தவனா? இல்லை!
உழைத்துக் கொடுக்க முடியாதவனா? இல்லை!
இப்படி எதுவும் இல்லையென்றால் பின்பு ஏன் இந்த தலாக்.. புலாவு..?
எதிர்பார்ப்புகள் ஆம்..,
கல்யாணத்திற்கு முன்பு மாப்பிளையைப் பற்றியும், மாப்பிளை வீட்டைப் பற்றியும் அளவுக்கு அதிகமான எதிர் பார்ப்புதான் இதற்கு முக்கிய காரணம். என்றும் சொல்லலாம்.
மாப்பிள்ளை வெளிநாட்டிற்கு போவார் கை நிறைய சம்பாதிப்பார் தாய் தந்தை மற்றும் கூடப்பிறந்தவர்களையெல்லாம் விட்டு விட்டு தனிக் குடித்தனம் வருவார். என்பது மட்டுமில்லாமல். தன்னுடைய தாய், தன் தகப்பனை ஆட்டுவிப்பதுபோல் தானும் தன் கணவனை ஆட்டுவிக்கலாம் என்று எண்ணுகிறபோது, கணவர் அதற்கு மாற்றமாக கணவன் கணவனாக இருக்கும்போது தானூன்றித் தனமாக போடுகிற தப்புக் கணக்கு தன் கணவர் வீட்டில் வீனாகி விடும்போது. பொறுமையில்லாமலும் புத்தி சொல்ல ஆளில்லாமலும் புத்தி சொன்னாலும் எடுபடாமல் போவதாலும் இப்படியான முடிவுகளை பெண்களே புலாவு செய்யும் நிலமையை உருவாகி விடுகிறது.
இன்னும் சில வீடுகளில் மகள் கணவனோடு வாழ விரும்பினாலும், பெத்த மகளுடைய வாழ்வை சூனியமாக்கும் சில பூலான்தேவி தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பேய்கள் படுக்க இடம் தராமல் போகும் என்பதற்காகவே தலையாட்டும் பெண்ணின் தகப்பன்கள் என்ற போர்வையில் தலையாட்டும் சில பொம்மைகளாக சில தகப்பன்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தகப்பனார் அருகில் இருந்து நல்லதையும் கெட்டதையும் எடுத்துக் கூறாமல் தானூன்றித் தனமாக வளர்த்த விளைவுகளாலும். வாதியையும் பிரதிவாதியையும் அழைத்து நேரில் வைத்து விசாரிக்க உறவுகளுக்கு நேரமில்லாமையும், தவறுக்கும் தப்புக்கும் துணை போகும் நல்லவர்களாலே இப்படிப்பட்ட தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது. என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இப்படி சில ஊர்களில் சில உண்மைகள் தூங்குவதால் அல்லவா இன்று நம்மையெல்லாம் தலாக் தலாக் தலாக் என்ற போர்வையில் சில பசுந்தோல் போர்த்திய புலி நம்மை எதிர்கொள்ள உருமிக்கொண்டு அலைகிறது.
திருமணங்களை எழிமையாக செய்து கொள்ளுங்கள் என்று சொல்லுகிற இஸ்லாம். மணமுறிவை எழிமையாக்கவில்லை, மாறாக பிரியப்போகும் அவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. பிளவு படுத்த நினைப்பவர்களையும் கடுமையாக கண்டிக்கிறது இனைந்து வாழ எத்தனையோ சந்தர்ப்பங்களையும சாதகங்களையும் வழங்குகிறது எழிதாக எழுத்துக்கள் மூலம் பிரிவினையை ஏற்படுத்துகிறவர்களுக்கு நாளை மறுமை நாளில் விசாரனை இல்லாமல் இறைவன் இவர்களை விடப்போவதில்லை..! பயந்து கொள்ளுங்கள் பாவம் செய்ய, அஞ்சிக் கொள்ளுங்கள். இதுபோன்ற பாவங்களை விட்டும். மறுமை நாழில் விசாரனையில் இருந்து நம்மை வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக…
செங்கோட்டையன்

Add Comment