கடையநல்லூர் வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுங்கள்

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.

                கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஊர்களில் படித்த பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் படிக்காதவர்களும் வெளிநாடுகளுக்கு செல்லும்போது பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இந்நிலையை போக்கிட கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட படித்த, படிக்காத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் எனது (கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர்) ஏற்பாட்டில் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை கடையநல்லூர் பிரதான வீதியில் அமைந்துள்ள மசூத் தைக்கா மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                      இம்முகாமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் மு.கருணாகரன் அவர்கள் துவைக்கி வைக்க இருக்கிறார்.

                       இவ்வேலைவாய்ப்பு முகாமில் இருபத்தைந்திறக்கும் மேற்பட்ட பிரபல தொழில் நிறுவனங்கள் வருகை தர இசைவு தெரிவித்துள்ளனர். இத்தோடு கற்றுக்கொள் ஊதியம் ஈட்டு என்ற திட்டத்தின் அடிபடையிலும் (LEARN AND EARN) சில நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க உள்ளன.

                           இந்த வேலை வாய்ப்பு முகாமில் மத்திய, மாநில அரசின் சிறுபான்மை அமைச்சகம், மனித வள மேம்பாடுத்துறை, திறன்மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட துறைகளின் 25 க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்று இளைஞர்களுக்கான  விழிப்புணவு,  அரசின் உதவிதிட்டம் குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர்.

                            இம்முகாமை பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெற விரும்புவர்கள் கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து  04.01.2017 தேதிக்குள் சமர்பித்து ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். அலுவலகத்தில் வழங்கப்படும் இந்த ரசீதை வேலைவாய்ப்பு முகம் நடைபெறும் 07.01.2017 அன்று வருகை தந்து நேர்காணலில் பங்கேற்கவும். இந்த அறிய வாய்ப்பை கடையநல்லூர் தொகுதி மக்கள் அவசியம் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலதிக தொடர்பிற்கு: 9865002188, 9894160616,9843614197, 04633-243666  

img-20161229-wa0008

img-20161229-wa0007

Add Comment