கடையநல்லூர் வேலைவாய்ப்பு முகாமில் 724 பேருக்கு அப்பாயின்ட் ஆர்டர்

கடையநல்லூர் வேலைவாய்ப்பு முகாம் !

கடையநல்லூர் எம் எல் ஏ கே. ஏ. எம் அபூபக்கர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த் வேலைவாய்ப்பு முகாமில் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

விழாவில் மத்திய மாநில அரசு அதிகாரிகளும் 34 நட்சத்திரக் கம்பெனிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். . சிறுபான்மையினர் அமைச்சச்சகம், இந்திய அரசு தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் , ஜனாப் டாக்டர் முஹம்மது நஈமுர்ரஹ்மான் அவர்களும் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.

724 பேர்களுக்கு அப்பாயின்ட் ஆர்டர் வழங்கப்பட்டது

இந்த முகாமில் கலந்துகொண்டவர்களில் 724 பேர்களுக்கு இன்டெர்வியூ நடந்த இடத்திலேயே அப்பாயின்ட் ஆர்டர் வழங்கப்பட்டது. மேலும் பலபேர்களுக்கு இண்டர்வியூ கார்டு அனுப்புவதாக சொல்லிச் சென்றுள்ளனர். .

சிவில் இன்ஜீனியரிங் பிரிவுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் அதில் பங்கு பெரும் ஒன்றிரண்டு கம்பெனிகள் தவிர்க்கமுடியாத காரணத்தினால் பங்கேற்கவில்லை. இருந்தாலும் அந்த விண்ணப்பங்கள் முறையாக அவர்களுக்கு அனுப்பப்பட்டு பரிசீலிக்கப்படும். அவர்களும் நல்ல வாய்ப்பினைப் பெறுவதற்கு எம் எல் ஏ அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று எம் எல் ஏ உறுதி கூறியுள்ளார்.

ஆங்கிலம் தெரியவில்லை

INTERVIEWவில் பங்கேற்ற வெளிமாநிலத்தவர்கள் சுட்டிக்காட்டிய சிறு குறை “பலருக்கு ஆங்கிலம் தெரியவில்லை” என்பதுதான் . இதனை மனதிற்கொண்டு விரைவில் கடையநல்லூர்த் தொகுதியில் ஆங்கிலப்பயிற்சி வகுப்பை துவங்கிட எம் எல் ஏ முயற்சிகளை மேற்கொள்வார்.

ஆசிரியப் பணிகளுக்காக முயற்சிகள மேற்கொண்டுள்ளவர்கள் வருடம் முழுவதும் எம் எல் ஏ அலுவலகத்தை அணுகலாம். அவர்களுக்கான வழிகாட்டுதல்களும் பணிகள் கிடைப்பதற்கான முயற்சிகளும் எம் எல் ஏ அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் என்று எம் எல் ஏ அவர்கள் அறிவித்துள்ளார்.

இராஜபாளையம் எம் எல் ஏ

இம்முகாமுக்கு வருகைபுரிந்த இராஜபாளையம் எம் எல் ஏ திரு தங்கப்பாண்டியன் அவர்கள் முகாமை சுற்றிப்பார்த்து மிகவும் மனம் மகிழ்ந்து பாராட்டி பேசினார். தனது தொகுதியிலும் இது போன்ற ஒரு முகாமை நடத்திடப் போவதாக ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளார்.மேலும் இவ்விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு அருணாசலம் அவர்களின் மனைவியும் கலந்துகொண்டு சிறப்பித்தார். .

பலரின் பாராட்டுக்களையும் வரவேற்பினையும் இவ்விழா பெற்றதன் காரணத்தால் உற்சாகமடைந்த எம் எல் ஏ அபூபக்கர் அவர்கள் வாய்ப்பிருந்தால் வருடத்திகு இரண்டுமுறை கூட இது போன்ற வேலைவாய்ப்பு முகாமினை நடத்திடலாம் என்று அறிவித்துள்ளார் .

15844778_1452330361473816_8262120324270026097_o 15875000_1452331128140406_3559248141904418983_o

Add Comment