முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன்? எதற்கு?

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன்? எதற்கு?விளக்க பொதுக்கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து  கிளைகளின் சார்பில் 07.01.2017 அன்று மாலை 6.30 மணியளவில் காயிதேமில்லத் திடலில் வைத்து, முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன்?எதற்கு? விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கடையநல்லூர் பேட்டை கிளையின் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு  நிகழ்ச்சி மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முகம்மது தாஹா, பொருளாளர் செய்யது மசூது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் “அண்ணலார் வழியில் அரும்பணிகள்” என்ற தலைப்பில் துவக்கவுரை ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து தனிக்கைக் குழு உறுப்பினர் கோவை ரஹ்மத்துல்லாஹ் “முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு ஏன்? எதற்கு?”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இப்பொதுக் கூட்டத்தில் ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை அனைத்து கிளை நிர்வாகிகள் மைதீன், குறிச்சி சுலைமான்,ஜப்பார், அமீன், பாதுஷா, சிராஜ், ஜாகீர் மற்றும் தொண்டரணியினர் சிறப்பாக செய்து இருந்தனர். இறுதியில் பேட்டை கிளை செயலாளர் நிரஞ்சர் ஒலி நன்றியுரையாற்றினார்.

இப்பொதுக் கூட்டத்தின் வாயிலாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.           இறைவன் ஒருவனே! அவனையே முஸ்லிம்கள் அனைவரும் வணங்க வேண்டும். அவனுக்கு யாரையும் இணைவைக்கக் கூடாது என்றும், இறைவனின் வேதமாகிய திருக்குர்ஆனையும், குர்ஆனுக்கு முரண்பாடாத ஆதாரப்பூர்வமான நபிவழியையும் முஸ்லிம்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை நெறியாக பின்பற்ற வேண்டும் என்றும் இந்த பொதுக்கூட்டம் முஸ்லிம்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

2.           இன்ஷா அல்லாஹ் வருகின்ற பிப்ரவரி மாதம் 12 ஆம் நாள், கடையநல்லூரில் நடைபெற இருக்கும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாவட்ட மாநாட்டில் இலட்சக் கணக்கான ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என இப்பொதுக் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

3.           பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தினால் தமிழகத்தில் வரலாறு காணாத வரட்சி ஏற்பட்டு தினந்தோறும் விவசாயிகள் மரணமடைகிறார்கள். ஆகவே இதற்கு நிவாரணம் காணும் வகையில்,தமிழகத்தை வரட்சி மாநிலமாக அறிவித்து,உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இப்பொதுக் கூட்டம் மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.

4.           கடையநல்லூர் நகராட்சியின் திட்டமிட்ட அலட்சியப் போக்கினால் தற்பொழுது கடையநல்லூர்  பேட்டை உட்பட அனைத்து பகுதியிலும் மீண்டும் “டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.  ஆகவே நகராட்சியின் சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சலை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

5.           32 வது வார்டு பகுதி உட்பட தெருக்களில் தோண்டப்பட்ட குழிகளை முறைப்படி மூடாமலும் அந்த பகுதிக்கு புதிதாக ரோடுகள் போடப்படாமலும் கடந்த நான்கு ஆண்டுகளாக காலதாமதம் செய்து வரும் நகராட்சி நிர்வாகத்தை இப்பொதுக் கூட்டம் வன்மையாக கன்டிக்கிறது.

fb_img_1483854610448 fb_img_1483854604172 fb_img_1483854600495

Add Comment