கடையநல்லூரை மிரட்டும் டெங்கு

கடையநல்லூரை மிரட்டும் டெங்கு

கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலால் கர்பிணி பெண் முகைதீன் பாத்திமா மரணம் பீதியில் மக்கள்

கடந்த 2009 ஆண்டுக்கு பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக பரவிய டெங்கு காய்ச்சல் அடுத்தடுத்த வருடங்களில் பல்வேறு பகுதிகளிலும் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதுஆனால் இந்தாண்டு கடையநல்லூர் பகுதியில் மட்டும் இந்த காய்ச்சலின் வீரியத்தை கட்டுப்படுத்த இயலாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகின்றது, அரசு மற்றும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எடுத்த எந்த முன்னெச்சரிக்கை மற்றும் தற்காப்பு ,தடுப்பு நடவடிக்கைகளும் பயனளிக்கவில்லை.

சுற்று வட்டார பகுதிகளில் டெங்குவின் சுவடே தெரியாமல் மாறிப்போன நிலையில் , கடையநல்லூரில் மட்டும் இந்த காய்ச்சலின் வீரியம் கூடுவதற்கும், குறையாமல்

சுகாதார சீர்கேட்டிற்கு காரணம் யார்?

15895064_1665007637130689_2471937545857252974_n

விழிப்புணர்வு அடையாமல் இருப்பது மக்களின் குற்றமா? அல்லது

விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிய அரசின் குற்றமா?

கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக காணப்படக்கூடிய கொடூரமான ஒன்று டெங்கு போன்ற பல மர்மக்காய்ச்சல்கள். இது இன்று நேற்று நடக்கும் விஷயம் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக பல மனித உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இன்று நடந்த கற்பினி பெண்ணின் மரணமும் குறிப்பிடத்தக்கது. இதுபோல் இன்னும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும், சிலர் கவலைக்கிடமான நிலையிலும் உள்ளனர். இதற்குக் காரணம் யார்?

நகர்ப்புறங்களில் சேரும் கழுவுகளை நகருக்கு வெளியே ஒதுக்குப்புறங்களில் சேகரிக்காமல் நகருக்கு உள்ளேயே சேகரிக்கும் அவலம் கடையநல்லூரில் இன்றளவிலும் நடந்து வருகின்றது.

இதுமட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதும், மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதும் பரவலாக காணப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் தகுந்த இடங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்காமல் மக்களை பொது இடங்களில் குப்பை கொட்டத்தூண்டுவதும், குப்பை சேகரிக்கும் இடம் (Dumping yard) நகருக்கு வெளியே அமைத்திருந்தும் குப்பைக்கழிவுகளை நகருக்குள்ளே சேகரிப்பதும், அதனை தகுந்த நேரத்தில் அப்புறப்படுத்தாததும் தான்.

15966057_1662619097369458_4729709367168540734_n

எவ்வளவோ சமுதாய இயக்கங்கள் இருந்தும் ஏன் மக்கள் விழிப்புணர்வு அடையவில்லை? அரசினை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாக்கத் தூண்டியும் போராடியும் ஏன் பலன் கிடைக்கவில்லை?

மேலும் சிறிய ஊர்களை காட்டிலும் கடையநல்லூர் கழிவுநீர் ஓடைகள் ஒன்றும் மோசமானவை இல்லை. சுகாதார கேடு மட்டுமே காரணம் என்றால் டெங்கு மட்டுமல்லமல் பல நோய்களின் இருப்பிடமாக கடையநல்லூர் மாறி இருக்க வேண்டும்,ஆனால் அதிர்ஷ்டவசமாக டெங்கு தவிர்த்த மிகப்பெரிய நோய்கள் எதுவும் இங்கே இல்லை மிக சாதாரணமாக பரவக்கூடிய மலேரியா , டய்பாய்டு போன்ற நோய்கள் கூட கட்டுக்குள் இருக்கும் நிலையில் டெங்கு மட்டும் கடையநல்லூரை மிரட்டுகிறது இதை சிந்தித்தாலே நிச்சயமாக சுகாதார கேடு, கழிவுநீர் வடிகால் பராமரிப்பு காரணம் அல்ல என்பது விளங்குககிறது.

திடீரென ஏற்பட்ட இயற்பியல் மாற்றம் என்ன ?ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய்க்கான அடிப்படை ஆணிவேர் எங்கே இருந்து நீள்கிறது கண்டறியப்படவேண்டிய முதண்மையான விசயம் இதுதான். இதற்காக வல்லுநர்கள் அடங்கிய மருத்துவ ஆய்வுக்குழுவை கடையநல்லூரில் களமிறக்க மத்திய ,மாநில அரசு முன்வர வேண்டும் .

டெங்குவால் இனியொரு உயிர் பிரியாமல் தடுக்க இனியாவது தடுப்போம்!

தகவல் :
– குறிச்சிசுலைமான்.

Add Comment