டெங்கு காய்ச்சலுக்கு நிரந்தரத் தீர்வு காண TNTJ நிர்வாகிகள் மனு

டெங்கு காய்ச்சலுக்கு நிரந்தரத் தீர்வு காண
மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து Tntj நிர்வாகிகள் மனு
ஜனவரி 10:நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். கடையநல்லூரில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒருவிதமான மர்ம காய்ச்சல் மக்களிடம் பரவி வருகிறது.

இந்த காய்ச்சலால் கடந்து 8ஆண்டுகளாக இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த சீசனில் வரும் நோய்க்கு மர்ம காய்ச்சல் என்றும் விஷக் காய்ச்சல் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதன் உண்மை நிலை என்னவென்று அறியமுடியவில்லை.

கடையநல்லூர் பகுதியில் மட்டும் இந்த காய்ச்சல் குறித்த மாதங்களில் வருகிறது. மக்கள் தனியார் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் சோதனை செய்யும் போது டெங்கின் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சுகாதாரப் பணிகளை தீவிரப் படுத்துமாறு பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், அதன்பேரில் இந்த காய்ச்சலின் வீரியத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் பயனளிக்கவில்லை.

ஆகவே இந்த பிரச்சனையால் கடையநல்லூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உயிர் இழப்புகளையும் சந்திக்கின்றனர்.

மேலும் இந்த ஆண்டு நேற்றை தினம் (09.01.2017) முகைதீன் பாத்திமா (22) என்ற கர்ப்பிணிப் பெண் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

மேலும் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகவே தாங்கள் சமூகம் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம் என நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு கருணாகரனிடம்
மாவட்ட தலைவர் முகம்மது பைசல் மனுக்கொடுத்தனர் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுப்பதாக உறுது அளித்தார்
அப்போது உடன் செயலாளர் முகம்மது தாஹா பொருளாளர் செய்யது மசூது, துணை தலைவர் புகாரி,துணை செயலாளர் அஹ்மது கடையநல்லூர் பஜார் கிளை தலைவர் குறிச்சி சுலைமான் ஆகியோர் இருந்தனர்

Add Comment