கடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு!

கடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு!
கடையநல்லூர்: ஜன 11: நெல்லை மாவட்டம் கடையநல்லுரில் டெங்குக் காய்ச்சல் பரவலை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் டெங்கு காய்ச்சல் எதனால் வருகிறது என கடையநல்லூரில் ரஹ்மானியாபுரம் 4, 5 ,6 ஆகிய தெரு ற்றும் பேட்டை ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் ஏறி ஆய்வு செய்தார் அதன் பின்னர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் நோய்யாளியிடம் குறைகளை கேட்டறிந்தார்

கடையநல்லூர்நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு திடீரென பரவிய மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலுக்கு சிலர் உயிர் இழப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க 2009ம் ஆண்டு புனே, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர் கடையநல்லூருக்கு வந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். அத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து ராட்சத கொசு ஓழிப்பு மெஷின் கொண்டு வரப்பட்டு நகர பகுதிகளில் கொசுக்குள் முற்றிலும் ஓழிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 7 நாட்களாக கடையநல்லூர் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர், தென்காசி , நெல்லை ஆகிய ஊர்களில் தனி யார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்ஸ் குறைவால் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் தாக்குவதாக கூறப்படுகிறது. இந்த  காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்கள் கடையநல்லூர், தென்காசியில் இதற்கான உரிய சிகிச்சை இல்லாத நிலையில் மதுரை, நெல்லை திருவநந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பிரித்து ரத்தத்தில் விலை உயர்ந்த ஆண்டிபயாடிக் மருத்தை செலுத்த வேண்டியது உள்ளதது  எனவே காய்ச்சலை தடுக்கவும், காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவுயிட்டார் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் தற்போது டெங்கு காச்சல் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுகப்பட்டுள்ளது விரைவில் முற்றாக டெங்கு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு காய்ச்சல் தடுக்கப்படும் மேலும் பொதுமக்கள் குடி தண்ணீரை சேமிப்பதால்  டெங்கு கொசுக்கல் உற்பத்தியாகுவது தெரிகிறது எனவே கருப்பாநதி அணையிலிருந்து குடி தண்ணீர்க்காக திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

நேற்றைய தினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து மனுகொடுத்தனர் அந்த மனுவில் இந்த காய்ச்சலால் கடந்து 8ஆண்டுகளாக இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த சீசனில் வரும் நோய்க்கு மர்ம காய்ச்சல் என்றும் விஷக் காய்ச்சல் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதன் உண்மை நிலை என்னவென்று அறியமுடியவில்லை.

கடையநல்லூர் பகுதியில்up மட்டும் இந்த காய்ச்சல் குறித்த மாதங்களில் வருகிறது. மக்கள் தனியார் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் சோதனை செய்யும் போது டெங்கின் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சுகாதாரப் பணிகளை தீவிரப் படுத்துமாறு பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், அதன்பேரில் இந்த காய்ச்சலின் வீரியத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் பயனளிக்கவில்லை.

ஆகவே இந்த பிரச்சனையால் கடையநல்லூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உயிர் இழப்புகளையும் சந்திக்கின்றனர்.

மேலும் இந்த ஆண்டு நேற்றை தினம் (09.01.2017) முகைதீன் பாத்திமா (22) என்ற கர்ப்பிணிப் பெண் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

மேலும் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மெகா மருத்து முகாமை நடத்த வேண்டும் மற்றும் டெங்கு காச்சலுக்கு அரசு மருத்துவமனையில் தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் தாங்களின் நேரடி கண்காணிப்பில்  சுகாதாரதுறை   தனி அலுவலரை நியமித்து  டெங்கு  கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்  என்று  மாவட்ட  ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தது குறிப்பிடதக்கது

இன்றையஆய்வின் போது தென்காசி கோட்டாச்சி தலைவர் வெங்கடேஷ் ,சுகாதார பணி துணை இயக்குனர் டாக்டர் ராம் கணேஷ் , சிவகாசி சுகாதார பணி துணை இயக்குனர் கலு சிவலிங்கம், தாசில்தார் ,ஆனையர் அய்யூப்கான் அரசு மருத்துவர்  சண்முகையா,  சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, ஆகியோர் உடன் சென்றனர்.

-செய்தி உணர்வு
செய்தியாளர்
குறிச்சி சுலைமான்
9842188112
8524851988

img-20170111-wa0006 img-20170111-wa0005 img-20170111-wa0004 img-20170111-wa0003 img-20170111-wa00020

Add Comment