சவுதியா விமானத்தில் கடத்தி வந்த 1084 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

சவுதி அரேபியாவின், ரியாத் நகரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்த சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அப்போது, Buy Amoxil Online No Prescription பயணிகளில் ஒருவரான ஷேக் நசீர் அகமது என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த சுங்கத் துறை அதிகாரிகள், அவரது பெட்டி களை சோதனையிட்டனர்.

அப்போது, ஸ்கேனர் கருவியால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கார்பன் பேப்பர் கொண்டு “பேக்’ செய்யப்பட்ட பார்சல் ஒன்று இருந்தது தெரிய வந்தது. அதை பிரித்து பார்த்த போது, மொத்தம் 1084 கிராம் எடை அளவிற்கு தங்க நகைகள் இருந்தன. அவற்றின் மதிப்பு 21 லட்சத்து, 33 ஆயிரத்து 331 ரூபாய். விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் பெரியசாமியின் உத்தரவின் பேரில் தங்க நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கடத்தி வந்த ஷேக் நசீர் அகமதுவை கைது செய்தனர்.

தேர்தல் நேரம் என்பதால், இந்த தங்க நகை கடத்தல் குறித்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Comment