
கடையநல்லூர் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்திட கோரி …….
தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய் பாஸ்கர் அவர்களுடன் SDPI கட்சியின் மாநில நிர்வாகிகள் சந்திப்பு
கடையநல்லூரில் பரவி வரும் காய்ச்சலை டெங்கு காய்ச்சல் என்று அறிவித்திட வேண்டும் என்றும் ,
காய்ச்சலின் வீரியத்தை கட்டுபடுத்த கூடுதல் மருத்துவர்கள் மற்றும் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் கருவியை கடையநல்லூர் மருத்துவமனையிலே அமைத்திட கோரியும் ,
இந்த காய்ச்சலினால் உயிரிழந்த இளம் பெண் மைதீன் பாத்திமா குடும்பத்திற்க்கு அரசின் சார்பாக இழப்பீடு தொகை அறிவித்திட வேண்டும் என்றும் .
கடையநல்லூரில் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் ஊரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பாம்பன் கால்வாயை உடனடியாக சுத்தம் செய்துதரும்படி SDPI கட்சியின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது
இந்த சந்திப்பின்போது SDPI கட்சியின் மாநில செயலாளர் H. அமீர் ஹம்ஸா , மாநில செயற்குழு உறுப்பினர் J.ஜாபர் அலி உஸ்மானி ஆகியோர் அமைச்சர் விஜய் பாஸ்கரிடம் கடையநல்லூரில் நிலவிவரும் சூழ்நிலையை எடுத்துக் கூறினர் பொறுமையுடன் அனைத்து விஷயங்களையும் கேட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் உத்தரவுவிட்டார் இத்துடன் டெங்கு காய்ச்சலை முழு கட்டுபாட்டிற்க்கு கொண்டுவருவோம் உறுதியளித்தார்
தகவல்:
ஜாபர் அலி உஸ்மானி
மாநில செயற்குழு உறுப்பினர்