கடையநல்லுரும் Dengue காச்சலும்

கடையநல்லுரும் Dengue காச்சலும்

*************************
மாவட்ட நிர்வாகமே இனியும் கடையநல்லூர் மக்களை முட்டாள் ஆக்காதே நாங்கள் பல உயிர்களையும் பல கோடி பணத்தையும் இழந்து விட்டோம் இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தப் பகுதியில் பரவியது மரும காச்சல் மற்றும் அணுக்குறைவு காச்சல் என்று சொல்லும் சொல்லை நிறுத்தி கொண்டு Dengue காச்சல் என்றுச் சொல் …………
Dengue என்று சொல் என்று நான் ஏன் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன் என்றால் இதை முழுவதும் படித்தால் புரியும்

நம் பகுதியில் உள்ள மருத்துவர்கள் dengue என்று உறுதியாக சொல்வது இல்லை காரணம் அவர்கள் சொன்னால் அந்த மருத்துவர் மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் ஆகவே அவர்கள் அணுக்குறைவு காச்சல் என்று புதிய சொல்லை பயன்படுத்துகிறார்கள் அதில் இருந்து தப்பிக்க

இதில் இருந்து புரிந்துக் கொள்ளவேண்டும் இது எவ்வளவு கொடிய காச்சல் என்று
இந்தக் காச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஐந்தாவது நாள் முதல் ஏழாவது நாள் வரை மிகவும் உச்சத்தில் இருக்கும் இந்த நாட்களில் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம்
இதை எப்படி கண்டு பிடிப்பது பாதிக்கப்பட்ட நபரின் இரத்த மாதிரியை igM- Elisa test க்கு உட்படுத்த வேண்டும் இதன் மூலமாக கண்டுபிடிக்க முடியும்
நமது பகுதியில் பரவியது Dengue தான் என்று என்னால் உறுதியாக கூற முடியும் அதற்கான மருத்துவ ஆதாரம் என்னிடம் உள்ளது
Dengue என்றுச் சொல்லாமல் மற்ம காச்சல் என்றுச் சொன்னால் என்ன என்றக் கேள்வி உங்கள் மனதில் எழும்
மற்ம காச்சல் என்றால் அரசால் சாதாரண காச்சாலாகவே கருதப்படும்
Dengue என்றால் தான் அதற்கான முறையான தீர்வு அரசு எடுக்கும்
dengue கண்டுபிடிக்க igM -Elisa test வசதிகள் நமது பகுதியில் இல்லை முதலில் Elisa test காண வசதியை நமது பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அரசு ஏற்படுத்தும் இதன் மூலம் நாம் திருநெல்வேலி செல்ல அவசியமில்லை

இந்த பகுதியில் Dengue கொசு வரக் காரணம் என்ன என்று அரசு கண்டுபிடித்தே ஆகவேண்டும் இதில் அரசுக்கு அதிகம் சிரமம் இருக்கிறது
இதை ஒரே வார்தையில் சுகாதர கேடு என்றுச் சொல்ல முடியாது
காரணம் அதிகமான மக்கள் நினைக்கும் சாக்டை , கழிவு நீர் , மீன் கழிவுகள் மற்றும் சுத்தம் இன்மை என்றால் இது 100% தவறான கருத்து
உண்மையிலேயே இது எப்படி பரவுகிறது என்றால் நாம் பயன்படுத்தும் தூய நீரில் தான் ( குடி நீரில் ) மூலமாக தான்
முன்பு ஏன் வரவில்லை இப்போது எப்படி வந்தது என்ற கேள்வி உங்கள் இடத்தில் வரும்
முன்பு நமது பகுதியில் குடி நீர் இரண்டு நாள் அல்லது அதிகப் படியாக மூன்று நாள்களுக்கு ஒரு முறை வந்தது
இப்போது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வருகிறது இந்த நீரை நமது வீட்டு தாய்மார்கள் சேர்த்து வைத்து பயன்படுத்துவதால்
அந்த நீர் இருந்து Dengue கொசுவின் புளுக்கள் உற்பத்தி ஆகி அது Dengue கொசுவாக மாறுகிறது
இந்த report ஐ மாவட்ட நிர்வாகம் அரசிடம் கொடுத்தால் மாநில அரசுக்கு மிக அதிகமாக பொருளாதார செலவு ஏற்படும்
அதுவும் போர்க் கால அடிப்படையில் ஒரு இலட்சம் மக்களுக்கு தினமும் சுகாதரமான குடி நீர் வழங்க வேண்டும் என்றால் அதிகமாக புதிய குடி நீர் நிலையங்களை ஏற்படுததுவது கட்டாயக் கடமையைக அரசுக்கு ஆகி விடும்

ஆகவே நமது பகுதியில் பரவியது dengue தான் என்பதை அரசு அறிவிப்பு செய்ய சொல்ல வேண்டும்
இதன் மூலம் நமது பகுதியில் தரமான குடி நீர் தினமும் கிடைப்பதை அரசு உறுதிப் படுத்தும்

இந்தச் செய்தியை மக்களிடம் அதிகமாக பரப்ப வேண்டும்.

Meeran Rajappa

Add Comment