கடையநல்லூரை டெங்கு பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்

கடையநல்லூர் M.L.A முயற்சியில் தமிழக சுகாதரத் துறை அமைச்சர் Dr. விஜய் பாஸ்கர் மற்றும் தமிழக சுகாதரத் துறை செயலாளர் Dr.ராத கிருஷ்ணும் நமது பகுதியில் பார்வை இட வருவதாக தகவல்கள்
நமக்கு நிரந்தரமாக Dengue வில் இருந்து தீர்வு கிடைக வேண்டும் அதற்கு இவர்கள் தான் சரியான நபர்கள்
ஏன் என்றால் இவர்கள் தான் சுகாதரத் துறையில் அமைச்சர் மற்றொருவர் உயர் அதிகாரி நாம் இவர்கள் இடத்தில் மிகவும் ஆக்கப்பூர்வமான அவசியமான கோரிக்கையை வைக்க வேண்டும்.

1. நமது பகுதியை Dengue பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்

2. நமது பகுதியில் எட்டு ஆண்டுகளாக இந்தப் Dengue காய்ச்சல் இருப்பதால் இந்தக் காய்ச்சலை கண்டுபிடிக்க கூடிய igM- Elisa test க்கு தேவையான வசதிகளை நமது அரசு மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டும் இதன் மூலம் தேவை இல்லாத பயம் மற்றும் பொருட்ச் செலவை தவிர்க்கலாம்

3.Dengue கொசு குடி நீரில் ( நல்ல தண்ணீரில் ) இருந்து இது உற்பத்தி ஆகுவதால் இதை தடுக்கும் விதமாக Dengue கொசுவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் குடி நீர்ரை நாம் சேமிப்பதை தவிர்க்க வேண்டும்
நீர் சேமிப்பை மக்கள் நிறுத்த வேண்டும் என்றால் நகராட்சி தினமும் குடி நீர் வினியோகம் செய்ய வேண்டும் இதற்காக கடையநல்லூர்க்கு சிறப்பு நிதியுதவி அரசு செய்ய வேண்டும்

4. Dengue ஆல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகுந்த நிவாரண உதவிகளை அரசு செய்ய வேண்டும்
இது போன்ற கோரிக்கையை நமது சமுதாய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அமைச்சர் மற்றும் Dr. ராத கிருஷ்ணன் இடத்தில் கொடுக்க வேண்டும்
இவர்கள் இடத்தில் நாம் கோரிக்கை செய்தால் அதற்கான முயற்சிகள் இவர்கள் கட்டாயம் செய்வார்.

அதற்கான சான்றாக கடந்த காலத்தில் தமிழகத்தில் சுனாமி தாக்கிய போது அந்தப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் மக்களோடு மக்களாக தமிழக சுகாதரத் துறை செயலாளர் Dr.ராத கிருஷ்ணும் நிவாரண மூகாமில் தங்கியிருந்து மக்கள் பணியை செய்தார்.

கடந்த காலத்தில் அனைத்து மக்கள் கண்களில் இருந்து நீர் வரவைத்த 80 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் தீ இல் எரிந்து சாம்பல் ஆன கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடந்த போதும் இவரின் நிவாரண பணிகள் மக்களின் பாரட்டைப் பெற்றது
ஆகவே இவர் தான் சரியான நபர் இவரை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நாகூர் மீரான் @ ராஜப்பா
Secretary
Kadayanallur islamic welfare association (KIWA)_U.A.E

Add Comment