ஜல்லிக்கெட் வீர விளையாட்டா?????

ஜல்லிக்கெட் வீர விளையாட்டா?????

ஐந்து அறிவு கொண்ட மிருகத்திடம் ஆறு அறிவு கொண்ட மனிதன் எப்படி தன் வீரத்தைக் காட்டமுடியும் ???

ஜல்லிக்கெட் வீர விளையாட்டு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் ஜல்லிக்கெட்டுக்கு எனது முழு ஆதரவு

நான்கு வரிகளில் இரண்டு முரண்படுகிற கருத்துக்களா? என்ற உங்கள் கேள்விகள் எனக்கு புரிகிறது அதற்கான காரணம்

அனைத்து மனிதர்களும் தான் செய்யும் வேலைக்கு அதிகமாக லாபம் எதிர் பார்ப்பது மனித இயல்பு
கடந்த காலத்தில் மாடுகளை பால் மற்றும் விவசாயிகள் சார்ந்த வேலைகளுக்காக வளர்க்கப்பட்டது
ஆனால் இன்றைய நிலை ??
மாடு வளர்பவருக்கு பெண் மாடுகள் மூலம் பால் கிடைக்கும் ஆண் மாடுகள் வளர்த்தால் என்ன கிடைக்கும் ???

இந்த கேள்விகளை கேட்பது போன்று மேற்கத்திய corporate company கள் மக்கள் வளம் மிக்க நமது நாட்டில் பால் பொருட்கள் வணிகம் செய்ய துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்
ஒரு கட்டத்தில் இந்தியாவில் ஆண் மாடுகள் அழிக்கபடும் எஞ்சிய பெண் மாடுகள் இயற்கைக்கு மாறாக தனக்குத் தானே இனப்பெருக்கம் செய்யமுடியூமா???

இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்றால் ஆணின் விந்து வேண்டும்
உரை நிலை விந்துவில் இருந்து இவர்கள் வியாபாரம் தொடங்கும் அதுவும் நமது நாட்டு மாடுகள் விந்தாக இருக்காது
ஜெர்சி போன்ற வெளிநாட்டு இன மாட்டின் விந்தாகத் தான் அது இருக்கும் இதன் மூலம் ஜெர்சி வகை மாடுகள் இந்திய முழுவதும் காணப்படும் ஆரோக்கியம் இல்லாத சத்துப் பொருட்கள் குறைவாக உள்ள இந்தப் பாலை பயன்படுத்தும் மக்களுக்கு பக்கவிளைவு நோய்கள் ஏற்படும்
அந்த நோய்களுக்கான மருந்துக்களை இவர்களை தாயார் செய்து விற்பனையும் செய்வார்கள்

ஜெர்சி இன மாடுகள் நமது பகுதியில் உள்ள வெப்ப நிலையில் வாழாது இதற்காக AC Room கள் தேவைப்படும் இங்கே தான் அவர்கள் சித்து விளையாட்டு ஆரம்பம்

நமது விவசாயிகள் இடத்தில் AC Room போட்டு மாடுகளை பாராமறிக் கூடிய அளவுக்கு வசதிகளும் இருக்காது அதற்கான நுட்பமான அறிவும் இருக்காது
இதனால் மாடு வளர்ப்பு கைவிடப்படும்

இந்திய விளை நிலங்கள் அவர்கள் விற்பனை களமாகும் அதில் களப் பணிகள் செய்ய நமது விவசாயிகளை பயன்படுத்துவார்கள்
இதற்கு நல்ல உதாரணம் என்றால் தற்போது
வளர்கப்படும் பிராய்லர் கோழிகள் போல்
மாடுகள் மற்றும் AC Room க்கு தேவையான பொருளாதாரங்களை அவர்கள் கொடுப்பார்கள்
நமது நிலத்தில் நமது உழைப்பின் வளர்ந்த மாடுகளின் பலன்களை அவர்கள் எடுத்துச் செல்வார்கள்

ஆகவே நமது பகுதியில் நாட்டு மாடுகள் வாழவேண்டு இதன் மூலம் நமது வரும் கால சந்ததிகளுக்கு சத்தான, ஆரோக்கியமான மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத பால் வேண்டும் என்றால் கொழுத்த ஆரோக்கியமான ஆண்மாடுகளை ( காளைகளை ) வளர்ந்து பாராமறிக்க வேண்டும்

இதை ஊக்கப்படுத்தவே நாம் ஜல்லிக்கெட்டை நடத்த வேண்டும்
ஒட்டுமொத்த தமிழகமும் இதை ஆதரிக்க வேண்டும்

I Am Support jalli kattu

Nagoor meeran @ Rajappa
Secretary of kadayanallur islsmic welfare association ( KIWA)-U.A.E

Add Comment