தென்காசியில் போராட்டத்தில் குதிக்கும் இளைஞகர்கள்

தென்காசியில் உள்ள
இளைஞர்கள் கூட்டம் சீறி வரட்டும்
தென்காசி நோக்கி…..

இடம்:புதிய பேருந்து நிலையம்
அருகில் (தென்காசி)

நாள் : 18-01-2017 புதன்கிழமை
நேரம் : காலை 10மணி

சாதி, மத, அரசியல் பேதங்களை கடந்து தமிழராய் கரம் சேர்ப்போம்….

வறட்சியால் விவசாயிகள் தொடர்ந்து மரணமடைவதை கண்டித்தும்
விவசாயமும் விவசாயிகளும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறித்தியும்….

நம் வீரத்தின் அடையாளமான ஏறுதழுவல் என்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு பறிபோவதைத் தடுக்கவும்….
ஒற்றுமையாக நாம் எழுப்பும் குரல் அதிகார மையத்தை சென்றடையட்டும்…..

1) உரையாற்ற விரும்புவோர் நாகரீகமான முறையில் வார்த்தைகளை உபயோகப்படுத்தவும்.

2) இந்திய இறையாண்மையை மதிக்கும் வகையில் பேசவும் .

3) அதீத உணர்வுகளை தூண்டும் விதத்தில் பேச வேண்டாம் .

4) முடிந்தால் கருப்பு டி சர்ட் அணிந்து வரவும்.

5) வாகனங்களை வரிசையாக அறிவிக்கப்பட்ட இடத்தில் அழகாக நிறுத்தவும்…

6) தயவுசெய்து எந்த வித சாதி மத அரசியல் அடையாளங்களை உடையிலோ பேச்சிலோ வெளிப்படுத்த வேண்டாம் .

7) நாம் ஒற்றுமை உணர்வும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ள தமிழ்க்கூட்டமென உலகிற்கு காட்டுவோம்…

8) ஒருங்கிணைப்பாளர்களின் அறிவிப்பு வேண்டுகோள்களை கேட்டு நடக்கவும்….

9)எந்த தனிமனிதரையோ அரசியல் கட்சிகளையோ அமைப்புகளையோ மறைந்த அல்லது உயிரோடிருக்கும் தலைவர்களையோ புகழ்ந்தோ இகழ்ந்தோ பேச வேண்டாம்.

10) ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பத்தில் வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு மௌன அஞ்சலி நடக்கும் அதனால் மிகச்சரியாக காலை 10 மணிக்கு வந்து விடவும் .

11) கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்கவும்.

12) குழந்தைகள் பெண்கள் முதியோர் ஆர்ப்பாட்டம் வருவதை தவிர்க்கவும் .

13) எந்த விதமான போதைப் பொருட்களையும் உட்கொண்டவர்களுக்கு நிச்சயமாக அனுமதி இல்லை.

14) காவல்துறை நண்பர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நமது ஆர்ப்பாட்டம் நல்லமுறையில் நிறைவடைய உதவவும்…

15) உரையாற்ற விரும்புவோர் சுருக்கமாக பேசி கருத்துகளை பதியவும்….

16) முழக்கங்களை எழுதி கொண்டு வருபவர்கள் ஒருங்கிணைப்பாளர்களின் அனுமதி பெற்று முழக்கமிடவும்…

17) நாம் நமது வருத்தத்தை கண்டனத்தை பதிவு செய்யவே ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்கிறோம் அதனால் தேவையற்ற விசில் சப்தங்கள் விநோத சப்தங்கள் தயவுசெய்து தவிர்க்கவும்.

தென்காசி தான் நாம் நாகரீகமான மிகச்சரியாக முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடிப்போம்….

அவரவர் பகுதிகளில் உள்ள நண்பர்களைத் திரட்டி பெருங்கூட்டமாய் இணைவோம்….

வாருங்கள் இளைஞர்களே….நமது
வீர விளையாட்டாம் ஏறுதழுவல் விளையாட்டை மீட்க ஒன்று கூடி குரல் எழுப்புவோம்….
தயக்கமின்றி வாருங்கள் இளைஞர்களே…

Add Comment