துபாயில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்திய தமிழக மருத்துவருக்கு விருது

துபாய் : துபாய் அரசின் மின் துறையின் சார்பில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்காக வழங்கப்படும் விருதினை 10.03.2011 வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக மருத்துவர் டாக்டர் முஹம்மது பர்வீன் பானுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

துபாய் அரசின் மின் துறையின் சார்பில் வருடந்தோறும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

2010 ஆம் ஆண்டுக்கான விருது பெற விண்ணப்பங்களை வரவேற்ற மின் துறை சுமார் 5000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றது. அதில் இருந்து சிறப்பான முறையில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்திய தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது பர்வீன் Buy Doxycycline Online No Prescription பானு – பொறியாளர் ஜாபர் அலி குடும்பத்தினர் விருது வழங்கி மின் துறை அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்டனர்.

பாத்ரூமில் ஷவரைப் பயன்படுத்துவதற்குப் பதில் வாலிகளை உபயோகப்படுத்துதல், கழிவு நீரை தோட்டத்திற்குப் பயன்படுத்துதல், தண்ணீர் வேகமாகப் பாய்வதைத் தடுக்க குழாயின் மீது மூடி உபயோகித்தல், ஏசியை 26 டிகிரியில் உபயோகப்படுத்தல், விளக்குகள் தேவையற்ற போது அணைத்து விடல், குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் விளக்குகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை தங்களுக்கு இவ்விருது கிடைக்க காரணமாக இருந்தது என டாக்டர் முஹம்மது பர்வீன் பானு தெரிவித்துள்ளார்.

விருது பெற்ற டாக்டர் பர்வீன் பானு குடும்பத்தினரை தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பாராட்டினர்.

Add Comment