முக்கிய பதிவு : ரூபெல்லா நோய் தடுப்பூசி பாதுகாப்பானதாகும்

கடையநல்லூர் சங்கர ன் கோவில் சுகாதாரதுறை இனை இயக்குனரின் வேண்டுகோள் அதிகம் பரப்பவும்

ஒரு அதி முக்கிய பதிவு

பெற்றோர்கள் கவனத்திற்கு

அரசு வருகிற பிப்ரவரி மாதம் 6 முதல் 28 தேதி வரை

9 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் மீசில்ஸ்
(தட்டம்மை) மற்றும் ரூபெல்லா நோய் தடுப்பூசியை இலவசமாக போட திட்டம் கொணர்ந்துள்ளது.

இந்த ஊசி பாதுகாப்பானதாகும்.

இந்த ஊசியின் மூலம் மீசில்ஸ் எனும் தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை நமது குழந்தைகளுக்கு வராமல் தடுக்கலாம்.

மீசில்ஸ் எனும் தட்டம்மை நோய் பிற அம்மை நோய்களைப் போலவே காய்ச்சல், உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுத்தும். இந்த நோய் எளிதில் உடலில் பரவி நியுமோனியா / உறுப்பு செயலிழப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகளை தோற்றுவிக்கவல்லது. இந்த நோயினால் குழந்தைகள் இறக்கும் அபாயமும் அதிகம்.

ரூபெல்லா எனும் நோய் கர்ப்பிணி பெண்களுக்கு வந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவி ஊனங்கள் வரும் வாய்ப்பு அதிகம். மேலும் ரூபெல்லா நோய் அதிக கருக்கலைப்புகளை ஏற்படுத்துகின்றது.

மீசில்ஸ் நோய்க்கு எதிராக நமது தடுப்பூசி திட்டத்தில் 9 மாதம் நிறைவான குழந்தைகளுக்கும் ஒன்றரை வயதான குழந்தைகளுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசியை தற்போது மீசில்ஸ் மற்றும் ரூபெல்லாவிற்கு எதிரான இரு நோய் தடுப்பு ஊசியாக (measles rubella Vaccine )என்று அரசாங்கம் தரம் உயர்த்தியுள்ளது.

இந்த ரூபெல்லாவிற்கு எதிரான தடுப்பூசி இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்பட்டு வந்தது. அதைத் தான் தற்போது இலவசமாக அரசு measles rubella vaccine என்று மாற்றியுள்ளது.

நான் சில நாட்களாக இந்த measles rubella vaccine குறித்து தவறான கருத்துகள் வாட்சப்பில் பரவி வருவதை கண்டு வேதனையடைந்தேன்.
அந்த வாட்சப் செய்தி கூறுவது யாதெனில் இந்த தடுப்பூசி நல்லதல்ல. கேடு விளைவிப்பது. இதில் அரசியல் லாப உள்நோக்கம் உள்ளது என்பது போன்று அந்த ஆடியோ மெசேஜ் இருக்கிறது.

அரசு மருத்துவர்கள், அரசு சுகாதார ஊழியர்கள் என்ற முறையில்
நாங்கள் இந்த தடுப்பூசி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக சென்று சேர வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறோம். ஆனால் எளிதில் தவறான கருத்தை வாட்சப்பில் பரப்பி விட முடிகிறது.

இது தவறு.

Measles rubella vaccine ஏற்கனவே தனியார் மருத்துவமனைகள் போட்டு வரும் ஊசி தான். இதுவரை பணம்படைத்தவர்கள் மட்டும் இந்த ஊசியை போட்டு வந்தனர்.

தற்போது இந்தியா முழுவதும் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்பட இருக்கிறது. மேலும் , இந்த measles rubella vaccine தேசிய தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட இருக்கிறது. 9 மாதங்கள் நிறைவுற்ற குழந்தைகளும் ஒன்றரை வயது குழந்தைகளுக்கும் இந்த measles rubella தடுப்பூசி தான் இனி போடப்பட உள்ளது.

வீண் புரளிகளை நம்ப வேண்டாம்

தடுப்பூசிகள் கொடும் நோய்களுக்கு எதிராக செயல்படுபவை.

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை

தயவுசெய்து தவறான பதிவுகளை நம்பவேண்டாம்.

உங்கள் குழந்தைகளுக்கு பிப்ரவரி மாதம் மீசில்ஸ்- ரூபெல்லா நோய்க்கு எதிரான தடுப்பூசி கிடைத்து விட்டதா என்பதை உறுதிசெய்யுங்கள்

நன்றி

Add Comment